கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும் - கேரளா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான மாண்புமிகு ரமேஷ் சென்னிதலா அவர்களின் மூத்த மகன் திருவளர்ச்செல்வன் மருத்துவர் ரோகித்துக்கும், திருவளர்ச்செல்வி மருத்துவர் சிறீஜா அவர்களுக்கும் பிப்ரவரி 17 ஆம் நாள் எர்ணாகுளத்தில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிப்ரவரி 21 ஆம் நாள் மாலையில் புதுமணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு இடையில், கேரளா மாநில அரசியல் மோதலில் இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு உயிர் இழந்ததால், இன்று மாலையில் நடைபெற இருந்த தனது இல்லத்துத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரமேஷ் சென்னிதலா ரத்து செய்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக ரமேஷ் சென்னிதலா அவர்களுடன் அரசியல் எல்லை கடந்து வைகோ அவர்கள் நட்புகொண்டு பழகி வந்ததால், வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், ரமேஷ் சென்னிதலா அவர்களின் இல்லத்துக்கு வைகோ அவர்களும், அவரது துணைவியார் திருமதி ரேணுகாதேவி அவர்களும் இன்று காலை ஒன்பதரை மணி அளவில் ரமேஷ் சென்னிதலா இல்லத்துக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
ரமேஷ் சென்னிதலா அவர்களும், அவரது துணைவியாரும், அவரது குடுபத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்கள் இல்லத்தில் மனமகிழ்ந்து உரையாடிவிட்டு வைகோ திரும்பினார்.
புகைப்படத்தில் நிற்பவர்கள் ரமேஷ் சென்னிதலா, திருமதி அனிதா ரமேஷ் சென்னிதலா, புதுமணமக்களான மருத்துவர் ரோகித், மருத்துவர் சிறீஜா, வைகோ, திருமதி ரேணுகாதேவி.
தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் இன்று 21-02-2019 வெளியிட்டுள்ளது.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment