கழக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களுடன் நக்கீரன் கோபால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் உள்ள சேப்பாக்கம் பகுதி கழக அவைத்தலைவர் மோகன் அவர்கள் மறைந்ததையொட்டி 27-02-2019 அன்று அவரது திருவுடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் துணைவியார் ரேணூகாதேவி அவர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் தென்சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கழககுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் துரை.குணசேகரன், சேப்பாக்கம் பகுதி செயலாளர் கார்த்திக், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், வேளச்சேரி பகுதி செயலாளர் செல்லப்பாண்டியன், திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் சி.என்.அண்ணாதுரை மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment