பேரறிஞர் அண்ணா அவர்களின் 51 வது நினைவு நாளை முன்னிட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் 03.02.2020 திங்கள் கிழமை மாலை சரியாக 4.00 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து அண்ணா துயில்கொள்ளும் மெரினா கடற்கரை வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் வந்தியதேவன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், கழக மாவட்டச் செயலாளர்கள், கே.கழககுமார், சு.ஜீவன், சைதை சுப்பிரமணி, டி.சி. ராஜேந்திரன், மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மகளிரணியினர் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment