மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை அவர்கள் செப் 4 ஆம் நாள் மறைந்தார். அவரது உடல் இன்று 7-9-2020 நாசரேத் கல்லறை தோட்டத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்று காலை 9.30 மணி அளவில் நாசரேத் துரை அவர்களின் பொன்னுடல் மீது மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து கண்ணீர் மல்க புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.
அருகில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று கண்ணீர் சிந்தியவாறு அன்னாரின் சிறப்புகளை
விவரித்து இரங்கல் உரை ஆற்றினார். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நாசரேத் துரை அவர்கள் மறைவில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட கழகத்தினர், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment