மக்கள் சேவையே கண்னாக கருதி இன்னாள் வரை அதிகாரமில்லாமல் சேவையாற்றியவர்கள் அதிகாரத்துடன் மக்கள் நலன் பேணுவார்கள்.
தொகுதி மக்களின் குறை தீர்க்கும் கருவியாக மக்கள் பணியாற்றுவார்கள். மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்ற அதீத நம்பிக்கை இருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் கழக வேட்பாளர்களுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் அன்பு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றிக்காக வாக்களித்த எஜமானர்களாகிய வாக்காள பெருமக்களுக்கும், வெற்றி பெற உழைத்த கழக கண்மணிகள் உள்ளிட்ட கள வீரர்கள் அனைவருக்கும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூலிழையில் வெற்றியை தவறவிட்ட மல்ல சத்யா அவர்களும், முத்துரத்தினம் அவர்களும் உயரிய பதவியை அடைந்திட வாழ்த்துக்கள்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
03-05-2021
No comments:
Post a Comment