கோவில்பட்டி திலக் ஜோதிடர் அவர்கள், கழக கண்மணிகள் இணையத்தில் இயங்குபவர்கள் அனைவரிடத்திலும் பேரன்பு கொண்டிருந்தார். அண்ணன் திலக் அவர்கள் ஜோதிடராக இருந்தாலும் பெரும்பாலான பெரியார் கொள்கைகளின் பற்றாக இருந்தார்.
கழகத்தின் மீதும், அன்பு தலைவர் வைகோ அவர்கள் செய்த மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.
அண்ணன் திலக் அவர்களின் தம்பி, மணிகண்டன் ஒமான் கழக உறுப்பினர். அவரும் தலைவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
அண்ணனிடத்தில் சில முக்கிய விடயங்களுக்கு அழைப்பதுண்டு, மற்ற காரியங்களை முகநூலிலே பேசுவோம்.
என் மீது மிக அன்பு கொண்டிருந்தார். சில வருடங்கள் முன்பு ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, தம்பி ஒமானில் இருக்கிறான். நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பெரிய வார்த்தை எல்லாம் உரிமையாக பேசினார்.
கழக இணைய கண்மணிகள் தென் மாவட்டங்களுக்கு வருபவர்களை உபசரிக்காமல் விடமாட்டார். அவ்வளவு குடும்ப பற்றாக கழகத்தை கொண்டிருந்தார்.
அதிர்ச்சி செய்தியாக மே 1 ஆம் நாள் ஊத்துப்பட்டி அருகே வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலன் இன்றி, நள்ளிரவு 11 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமூக ஊடகங்களில் தலைவர்
வைகோ அவர்கள் பற்றியும், கழகம் பற்றியும் அதிகம் எழுதினார்.
அவரது இழப்பு கழக இணைய கண்மணிகளுக்கும், கழகத்திற்கும் ஈடு செய்ய முடியாதது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
3-5-2021
No comments:
Post a Comment