இன்று உலக மருத்துவர் நாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக 24 மணி நேரமும் உழைத்து, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வெற்றி கண்டு வருகின்றார்கள்.
அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆட்சியில் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார்கள்.
அந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், மருத்துவரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.07.2021
No comments:
Post a Comment