Tuesday, December 29, 2015

சமையல் எரிவாயு மானியம் ரத்து அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வைகோ வலியுறுத்தல்!

பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு கட்சிக்கும் வேறுபாடு இல்லை. மோடி அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சென்ற வழியில்தான் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலக வர்த்தக நிறுவனம், உலக வங்கி இடுகிற உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில் பொருளாதார இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு அடகு வைத்து வரும் நிலைமை தொடர்கிறது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 36.05 டாலர் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துவிட்டது. இது 2004 ஆம் ஆண்டு இருந்த விலை நிலவரமாகும். கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்து வரும் மத்திய அரசு பன்னாட்டுச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும்போது அதற்கு ஏற்றவாறு விலையைக் குறைத்திருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை 2004 ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு குறைந்திருக்கும் நேரத்தில் அப்போதிருந்த விலையான பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆகவும், டீசல் விலை 22.74 ஆகவும் இருந்த அளவுக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. அரசு இதற்குத் தயாராக இல்லாதது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை தொடர்ந்து உயர்த்தி கச்சா எண்ணெய் வீழ்ச்சியின் பயன் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

2004 ஆம் ஆண்டில் சமையல் எரிவாயு உருளை ரூபாய் 261.60 ஆக இருந்தது. தற்போது சுமார் 100 விழுக்காடு உயர்ந்து, ரூபாய் 419.26 ஆகிவிட்டது. இந்நிலையில் பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

சமையல் எரிவாயு மட்டுமின்றி, அரசின் சார்பில் மக்களுக்கு எவ்வித மானியமும் அளிக்கக் கூடாது என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையாகும். தற்போது ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு மானியம் ரத்து என்கிற அறிவிப்பின் மூலம், படிப்படியாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழு மானியத்தையும் ரத்து செய்யப்படும் நிலைமை உருவாக்கப்படும். தாமாக முன்வந்து இதுவரை 57.5 இலட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசின் மானிய சுமை கணிசமாக குறைந்துவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு சமையல் எரிவாயு மானிய இரத்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணைய்தள அணி

தெற்கு அச்சம்பட்டி கிளை கழக அவைத்தலைவர் அ.பெருமாள்சாமி திருவுருவப் படத்திற்கு வைகோ மரியாதை!

28.12.2015 இரவு 7:30 மணிக்கு, தலைவரின் தில்லி உதவியாளர் செந்தூர் பாண்டியன் அவர்களின் இளைய அண்ணனும்,தெற்கு அச்சம்பட்டி கிளை கழக அவைத்தலைவருமான அ. பெருமாள்சாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மக்கள் தலைவர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, December 28, 2015

வி.ஐ.டி பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் எழுதிய நூல் வெளியீட்டில் வைகோ!

வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய "அண்ணா அருமை அண்ணா" புத்தக வெளியீட்டு விழாவானது 29.12.2015 மாலை 5.00 மணி அளவில், சென்னை அண்ணாசாலையில் அமைந்திருக்கும், இராணி சீதை மன்றத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வில், அண்ணாவின் திராவிட வாரிசு வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

திராவிட இயக்க நூற்றாண்டு விழா சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி!

கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் இருந்து திருப்பூர் பல்லடம் மதிமுக மாநாடு நடைபெற்ற பந்தலுக்கு  324 கி.மீ தூரம் திராவிட இயக்க நூற்றாண்டு சுடரை ஏந்தி சுடர் ஓட்ட வீரர்கள் ஓடி வந்தனர். 
 
அந்த வீரர்களுக்கு, தலைவர் வைகோ அவர்களின் பொற்கரங்களினால் 03.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் திருச்சி கஜப்பிரியா ஹோட்டலில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 
 
சுடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட பயண வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தலைவர் வைகோ அவர்களின் கரங்களினால் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு - நிகழ்ச்சி நடைபெறுகிற அன்று காலை 7.30 மணிக்கெல்லாம் சுடர்பயண வீரர்கள் அனைவரும் வந்துவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:
மணவை தமிழ்மாணிக்கம்
துணை செயலாளர்-மாணவரணி
அலைபேசி - 9943603331

சசிகுமார்
அமைப்பாளர்-மாநில மாணவர் மன்றம்
அலைபேசி - 9942671930
 
ஓமன் மதிமுக இணையதள அணி

நெல்லை புறநகா் மாவட்ட கழக அலுவலகம் திறந்து வைத்தார் வைகோ!

28.12.2015 மாலை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் வைகோ அவர்கள் அலௌவலகம் மற்றும் கணிணியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக தோழர்கள் தங்களது திமுக உறுப்பினர் அட்டையை தலைவர் வைகோ அவர்களிடம் வழங்கி தங்களை மதிமுக வில் இணைத்துக் கொண்டார்கள்.

பத்திாிக்கையாளா்கள் சந்திப்பில், தஞ்சையில் தேமுதிக வினா் மீது பாசிச ஜெயாவின் அடிமைகள் தாக்குதல் நடத்தியதற்கு தலைவா் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி 

நெல்லை மாநகராட்சி 26 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டேனியல் ஆபிரகாம் இல்ல மணவிழாவில் வைகோ!

28.12.2015 இன்று பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாநகராட்சி 26வது வார்டு மாமன்ற உறுப்பினர் டேனியல் ஆபிரகாம் அவர்களின் மகன் திருமண விழாவில் தலைவர் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக அலுவலக திறந்து வைக்கிறார் வைகோ!

நெல்லை மாவட்ட கழக அலுவலகம் (கணினி வசதியுடன்) இன்று 28.12.2015 மாலை 4 மணிக்கு தலைவர் "வைகோ" திறந்து வைக்கிறார். மேலும் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர்  தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் பதவி ஏற்பு விழாவும் நடைபெறுகிறது.

நெல்லை கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதிட சென்னையில் தேர்வு மையத்தை ஏற்பாடு செய்ய வைகோ வலியுறுத்தல்!

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (All India Post Graduate Medical Entrance Exam - AIPGMEE) டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர் மழை வெள்ளம் காரணமாக சென்னை, அம்பத்தூரில் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு திட்டமிட்டவாறு நடைபெறுமா என்று உயர் மருத்துவக் கல்விக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, உறுதியாக நடக்கும் என்று மருத்துவக் கவுன்சில் சார்பில் கூறப்பட்டது. சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த மோசமான சூழலிலும், டிசம்பர் 2 ஆம் தேதி அம்பத்தூரில் நுழைவுத் தேர்வு நடக்கும் மையத்துக்கு மருத்துவர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு நுழைவுத் தேர்வு நடைபெறாதது மட்டுமல்லாமல், பொறுப்பாக பதில் கூற ஒருவரும் வரவில்லை. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் இத்தகைய பொறுப்பற்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மீண்டும் ஜனவரி 11, 2016 இல் நடைபெறும் என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆனால் டெல்லி, மும்பை, புனே, புவனேÞவரம், காஷ்மீர், மேகாலயா போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேர்வு மையங்களுக்குச் சென்று தமிழகத்தில் மருத்துவ உயர்கல்விக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்கள் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதிட காத்திருக்கும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் காலம், இடம் யாவும் மருத்துவக் கவுன்சில்தான் தீர்மானிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ உயர் கல்வி இடங்களுக்கு தமிழ்நாட்டில் விண்ணப்பித்திருப்போர் நுழைவுத் தேர்வு எழுத முடியாத நிலை உருவாகும் பட்சத்தில் அந்த இடங்களை மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து விடலாம் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் கருதுகிறது. எனவேதான் மருத்துவ மேற்படிப்புக்காக நுழைவுத் தேர்வை டெல்லி, மும்பை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் இத்தகைய அணுகுமுறை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, எதேச்சதிகாரமானது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

எனவே ஜனவரி 11, 2016 அன்று நடக்க இருக்கின்ற மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வை, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையத்தை ஏற்பாடு செய்திட மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு, உடனடியாக இதில் கவனம் செலுத்தி மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, December 27, 2015

தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை!

தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவருமான கோவில்பட்டி எல்.எஸ்.கணேசன் அவர்களின் சகோதரர் ரவி அவர்களின் திருஉருவப் படத்திற்கு 27-12-2015 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி




மாரியம்மாள் புகழஞ்சலி, ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம்!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 25-12-2015 வெள்ளிகிழமை செயல்வீரர்கள் கூட்டம் மஸ்கட் ரூவியில் நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெயசேகர், நவீன் அவர்கள் வருகை தந்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களை வரவேற்றார்கள். பிரேம் ஜாஸ்பர், விஸ்வநாதன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து அன்னை மாரியம்மாளுக்கு இணையதள அணி நண்பர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி புகழஞ்சலி செலுத்தி 2 நிமிடம் மெளனமாக வீரவணக்கம் செலுத்தினார்கள். 

புதிதாக சேந்துள்ள உறுப்பினர்களுடன் சேர்ந்து அனைத்து ஓமன் இணையதள அணி உறுப்பினர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள கூட்டமானது சிறப்பாக தொடங்கியது. மாஹீன், ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஏற்கனவே ஒமன் மதிமுக இணையதள அணி தோழர்கள் கழக வாழ் நாள் உறிப்பினராக விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 6 பேருக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பின்னர் அனைத்து உறுப்பினர்களுடன் கழக முன்னேற்றம் பற்றியும் இணையதள அணி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கழக நண்பர்களை ஒருங்கிணைத்து அனைத்து செயல்பாடுகள் அற்புதமாக இருந்துது.  தமிழக மக்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டதற்கு தலைவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி ஆறுதலையும், நிவாரண உதவியையும் செய்தது மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு பெருத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பெரு மழையால் சமத்துவமும், மனிதநேயமும் மேலோங்கி நிற்பது மகிழ்ச்சியடைய செய்கிறது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிந்து கிடந்த தமிழர்களை மழை நீர் ஒருங்கிணைத்திருக்கிறது. அதை நாம் தொடர்ந்து பேண வேண்டும். கழக தோழர்கள் சகோதரத்துடன் பணியாற்ற வேண்டும்.

கழக நபர்கள் தேவையில்லாத அடுத்த கழக விடயங்களில் விவாதங்கள் செய்வதை தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணியின் செயல் திட்டங்களை மக்களிடத்தில் கொன்டு சேர்ப்பதே சால நிறந்ததாகும். அதன் மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும். ஆண்ட ஆளுகின்ற கட்சிகளை மக்கள் புறக்கணிப்பதாலும், மாற்றம் வேண்டுமென்று எண்ணுவதாலும், மக்கள் நலக் கூட்டணி வருகிற தேர்தல் 2016 ல் ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார். 

ஓமன் மதிமுக இணையதள அணியினரின் ஆலோசனைகளின்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:-

தீர்மானம்:-

1. மழை நீரால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் அன்றாட சிறு தேவைகளுக்கு, வழங்கப்பட்ட நிவாரணத்திற்காக ஓமன் மதிமுக இணையதள அணியினரை அன்பு பாராட்டி தலைவர் வைகோ அவர்கள் அலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததற்காக கழக தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைய தொடங்கிய நாட்களிலிருந்தே ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நிவாரண உதவி பொருட்கள் வழங்கி வருகின்ற மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கும், ஒத்துளைத்த தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


3. வருகிற 2016 ஆம் வருடம் நடைபெறுகிற சட்டசபை தேர்தலுக்கு இப்போதே நிதிகளுக்கான நடவடிக்கைகளை தொடரவும், கழகத்தின் தேர்தல் செலவுகளுக்காக நிதியை தேர்தலுக்கு முன்பே கழகத்திற்கு கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

4. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது இணைப்பு வழியாகவோ விமான சேவை வேண்டி நடந்த கையெழுத்து சேகரிப்பில், கையெழுத்து அடங்கிய ஆவணங்களை தலைவர் வைகோவிடம் வருகிற கலிங்கப்பட்டி பொங்கல் நிகழ்ச்சிகளில், ஓமன் மதிமுக இணையதள அணியினரால் கையளிக்கப்படும் என்றும், திரு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் தலைவர் மூலமாக எடுத்து செல்ல வலியுறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


5. உலகளாவி பரவி கிடக்கும் மதிமுக இணையதள அணியினர், மக்கள் நலக் கூட்டணியைப் பற்றியும், அதன் செயல்பாடுகள், குறைந்தபட்ச செயல் திட்டங்கள் பற்றியும், அதிகமாக இணையத்தில் பரப்புரை செய்து, இணையப் புரட்சியை ஏற்ப்படுத்தவும், 2016 சட்டசபை தேர்தலில் பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டிய விதத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டியும் ஓமன் மதிமுக இணையதள அணி வலியுறுத்துகிறது.

6. மதிமுக இணையதள அணி சார்பில் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருக்கும் இனையதள (www.pambaramtv.com) பம்பரம் டிவி – ஐ பொதுமக்களுக்கு அதிகமாக பகிர்வதன் மூலம், ஊடக புரட்சியை ஏற்ப்படுத்த வேண்டுமென்றும், அதை தொடங்கி செயல் வடிவம் கொடுத்து, பணியாற்றிக் கொண்டிருக்கும் மதிமுக இணையதள அணி தோழர்கள் அனைவருக்கும் ஓமன் இணையதள அணி நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறது.


கூட்ட முடிவில், பல நண்பர்கள தங்களை மதிமுக வாழ்நாள் உறுப்பினராக கழகத்தில் இணைத்துக்கொள்ள விண்ணப்பித்தார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி செயல் வீரர்கள் கூட்டத்தில்  கலந்து கொண்ட உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. விஜயராகவன்
3. நாகேந்திர குமார்
4. ராக்கப்பன்
5. கனகராஜ்
6. பிரேம் ஜாஸ்பர்
7. சத்திய பிரகாஸ்
8. பால கிருஷ்ணன்
9. ஜெயசேகர்
10. நவநீத கிருஷ்ணன
11. மாஹீன்
12. விஸ்வநாதன்
13. மகேந்திரன்
14. ராதாகிருஷ்ணன்
15. ராஜேஷ்
16. தேசபந்து தாஸ்
17. செந்தில்

இறுதியில் நாகேந்திர குமார் அவர்கள் நன்றி கூறினார்கள். அனைத்து நண்பர்களின் ஒத்துளைபுடன் கூட்டம் இனிதே நடந்தேறியது.

ஓமன் மதிமுக இணையதள அணி