Sunday, December 27, 2015

மாரியம்மாள் புகழஞ்சலி, ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம்!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 25-12-2015 வெள்ளிகிழமை செயல்வீரர்கள் கூட்டம் மஸ்கட் ரூவியில் நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜெயசேகர், நவீன் அவர்கள் வருகை தந்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களை வரவேற்றார்கள். பிரேம் ஜாஸ்பர், விஸ்வநாதன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து அன்னை மாரியம்மாளுக்கு இணையதள அணி நண்பர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி புகழஞ்சலி செலுத்தி 2 நிமிடம் மெளனமாக வீரவணக்கம் செலுத்தினார்கள். 

புதிதாக சேந்துள்ள உறுப்பினர்களுடன் சேர்ந்து அனைத்து ஓமன் இணையதள அணி உறுப்பினர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள கூட்டமானது சிறப்பாக தொடங்கியது. மாஹீன், ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஏற்கனவே ஒமன் மதிமுக இணையதள அணி தோழர்கள் கழக வாழ் நாள் உறிப்பினராக விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் 6 பேருக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பின்னர் அனைத்து உறுப்பினர்களுடன் கழக முன்னேற்றம் பற்றியும் இணையதள அணி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கழக நண்பர்களை ஒருங்கிணைத்து அனைத்து செயல்பாடுகள் அற்புதமாக இருந்துது.  தமிழக மக்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டதற்கு தலைவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி ஆறுதலையும், நிவாரண உதவியையும் செய்தது மக்கள் மத்தியில் மக்கள் நலக் கூட்டணிக்கு பெருத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பெரு மழையால் சமத்துவமும், மனிதநேயமும் மேலோங்கி நிற்பது மகிழ்ச்சியடைய செய்கிறது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிந்து கிடந்த தமிழர்களை மழை நீர் ஒருங்கிணைத்திருக்கிறது. அதை நாம் தொடர்ந்து பேண வேண்டும். கழக தோழர்கள் சகோதரத்துடன் பணியாற்ற வேண்டும்.

கழக நபர்கள் தேவையில்லாத அடுத்த கழக விடயங்களில் விவாதங்கள் செய்வதை தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணியின் செயல் திட்டங்களை மக்களிடத்தில் கொன்டு சேர்ப்பதே சால நிறந்ததாகும். அதன் மூலம் மக்களின் செல்வாக்கை பெற முடியும். ஆண்ட ஆளுகின்ற கட்சிகளை மக்கள் புறக்கணிப்பதாலும், மாற்றம் வேண்டுமென்று எண்ணுவதாலும், மக்கள் நலக் கூட்டணி வருகிற தேர்தல் 2016 ல் ஆட்சியை பிடிக்கும் என்று பேசினார். 

ஓமன் மதிமுக இணையதள அணியினரின் ஆலோசனைகளின்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:-

தீர்மானம்:-

1. மழை நீரால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் அன்றாட சிறு தேவைகளுக்கு, வழங்கப்பட்ட நிவாரணத்திற்காக ஓமன் மதிமுக இணையதள அணியினரை அன்பு பாராட்டி தலைவர் வைகோ அவர்கள் அலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததற்காக கழக தலைவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

2. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைய தொடங்கிய நாட்களிலிருந்தே ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நிவாரண உதவி பொருட்கள் வழங்கி வருகின்ற மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கும், ஒத்துளைத்த தொண்டர்களுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


3. வருகிற 2016 ஆம் வருடம் நடைபெறுகிற சட்டசபை தேர்தலுக்கு இப்போதே நிதிகளுக்கான நடவடிக்கைகளை தொடரவும், கழகத்தின் தேர்தல் செலவுகளுக்காக நிதியை தேர்தலுக்கு முன்பே கழகத்திற்கு கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

4. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாகவோ அல்லது இணைப்பு வழியாகவோ விமான சேவை வேண்டி நடந்த கையெழுத்து சேகரிப்பில், கையெழுத்து அடங்கிய ஆவணங்களை தலைவர் வைகோவிடம் வருகிற கலிங்கப்பட்டி பொங்கல் நிகழ்ச்சிகளில், ஓமன் மதிமுக இணையதள அணியினரால் கையளிக்கப்படும் என்றும், திரு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் தலைவர் மூலமாக எடுத்து செல்ல வலியுறுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


5. உலகளாவி பரவி கிடக்கும் மதிமுக இணையதள அணியினர், மக்கள் நலக் கூட்டணியைப் பற்றியும், அதன் செயல்பாடுகள், குறைந்தபட்ச செயல் திட்டங்கள் பற்றியும், அதிகமாக இணையத்தில் பரப்புரை செய்து, இணையப் புரட்சியை ஏற்ப்படுத்தவும், 2016 சட்டசபை தேர்தலில் பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டிய விதத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டியும் ஓமன் மதிமுக இணையதள அணி வலியுறுத்துகிறது.

6. மதிமுக இணையதள அணி சார்பில் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருக்கும் இனையதள (www.pambaramtv.com) பம்பரம் டிவி – ஐ பொதுமக்களுக்கு அதிகமாக பகிர்வதன் மூலம், ஊடக புரட்சியை ஏற்ப்படுத்த வேண்டுமென்றும், அதை தொடங்கி செயல் வடிவம் கொடுத்து, பணியாற்றிக் கொண்டிருக்கும் மதிமுக இணையதள அணி தோழர்கள் அனைவருக்கும் ஓமன் இணையதள அணி நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறது.


கூட்ட முடிவில், பல நண்பர்கள தங்களை மதிமுக வாழ்நாள் உறுப்பினராக கழகத்தில் இணைத்துக்கொள்ள விண்ணப்பித்தார்கள். 

ஓமன் மதிமுக இணையதள அணி செயல் வீரர்கள் கூட்டத்தில்  கலந்து கொண்ட உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. விஜயராகவன்
3. நாகேந்திர குமார்
4. ராக்கப்பன்
5. கனகராஜ்
6. பிரேம் ஜாஸ்பர்
7. சத்திய பிரகாஸ்
8. பால கிருஷ்ணன்
9. ஜெயசேகர்
10. நவநீத கிருஷ்ணன
11. மாஹீன்
12. விஸ்வநாதன்
13. மகேந்திரன்
14. ராதாகிருஷ்ணன்
15. ராஜேஷ்
16. தேசபந்து தாஸ்
17. செந்தில்

இறுதியில் நாகேந்திர குமார் அவர்கள் நன்றி கூறினார்கள். அனைத்து நண்பர்களின் ஒத்துளைபுடன் கூட்டம் இனிதே நடந்தேறியது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment