நாளை 22.12.2015 காலை 9 மணி அளவில் மத்திய சென்னை மாவட்டம் - வில்லிவாக்கம் பகுதி, வில்லிவாக்கம் சிட்கோ நகர், 4ஆவது பிரதான சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், மாலை 3 மணி அளவில் வட சென்னை மாவட்டம், சென்னை-21, கொருக்குப்பேட்டை, மரியம் திருமண மண்டபத்திலும்(கே.என்.எஸ். டிப்போ அருகில்), மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் மக்கள் நலக் கூட்டணி கட்சி தலைவர்களான, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.,), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
கழக உடன்பிறபுக்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment