29-12-2015 செவ்வாய் மாலை 6 மணிக்கு இராணி சீதை மன்றத்தில் "அண்ணா அருமை அண்ணா" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் வைகோ சரியாக வருகை தந்தார். பின்னர் வருகை தந்த தோழர் தா.பாண்டியன் அவர்களை வரவேற்றார். இதில் கண்ணதாசன் பதிப்பகத்தார் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நூல் பரிசளித்தனர்.
“அண்ணா அருமை அண்ணா” என்ற நூலை, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர் ஹண்டே அவர்கள் பெற்று கொண்டார்கள். அறிஞர் அண்ணா குடும்பத்தாருக்கு தமிழின முதல்வர் வைகோ மற்றும் ஜி.விஸ்வநாதன் அவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்தினார்கள். அறிஞர் என்றால் அது அண்ணா மட்டுமே என இரா.செழியன் உரை நிகழ்த்தினார்.
உரை நிகழ்த்திய ஹண்டே அவர்கள், பொறாமை என்றால் என்னவென்றே தெரியாதவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களின் நகலை நூலகத்தில் பாதுகாக்க திரு.ஜி.வி அவர்களிடம் வழங்கினார் திரு.ஹண்டே அவர்கள். இந்த கடித தொகுப்பு திரு.புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரிடம் அண்ணா அவர்களின் நண்பர் கொடுத்தாராம் என்றார்.
அண்ணா உழைக்கத்தான் அழைத்தார் தம்பி வா என்று, பிழைக்க அல்ல என முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பேசினார்.
அரசியல் ரீதியாக எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அறிஞர் அண்ணா அவர்களின் பொதுக்கூட்டங்களையும் கட்டுரைகளையும் தவறவிடுவதில்லை. குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே அவைகளை கவனிப்பேன் என மனம் திறந்து பேசினார் தா.பாண்டியன்.
பாஜக தலைவர் இல.கணேசன் அவர்கள் விழாவிற்கு வருகைதந்த்தையொட்டி, தலைவர் வைகோ அவர்கள், கைக்கூப்பி வரவேற்றார். காங்கிரஸ் எம்.கிருஷ்ணசாமி பேசும்போது, எல்லா பெருமையும் பெற்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு பாரத ரத்னா விருது ஏன் தரவில்லை என தெரியவில்லை என கூறினார்.
நூல் ஆசிரியர் ஜி.விஸ்வநாதன் அவர்கள் தனது ஏற்புரையில், அரசியல் தீண்டாமையை தமிழ்நாட்டில் இல்லாமல் ஆக்கியது அறிஞர் அண்ணா அவர்களின் பெருமை என பேசினார்.
பின்னர் வைகோ அவர்கள் பேச வந்தார். அவர் இந்த நிகழ்சிக்கு வரும்போதே, வைகோ அவர்களை வரவேற்று ஒரு பதாகை நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தின் வெளியிலே கழகத் தோழர்களால் வைக்கப்பட்டிருந்தது. தலைவர் மண்டபத்தினுள்ளே நுழையும் போதே அதை பார்த்துவிட்டு அதை உடனே அகற்றச் சொன்னார். பிறகு விழா ஏற்பாட்டார்களை பார்த்து தவறு நேர்ந்து விட்ட்து. மன்னித்து கொள்ளுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசும்போதும், தனது உரையில் இது பற்றி குறிப்பிட்டார். எங்கு பெயர் வரும். எப்படி எல்லாம் விளம்பரபடுத்தலாம் என நினைக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் அண்ணா அவர்களை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் தன்னை முன்னிலைபடுத்திய பதாகையை கூட அகற்றச் சொன்ன தமிழின முதல்வர் வைகோ அவர்களின் மனப்பக்குவம் அளப்பரியது.
தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, மதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான சங்கொலியின் முன்னாள் பொறுப்பு ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாற்று நூலை குறிப்பிட்டு பேசினார். இந்த உலகத்தில் அண்ணாவின் தம்பிகள் நாங்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமை படுகிறோம். பேரறிஞர் அண்ணா கண்ட நேர்மை, எளிமை எங்கே. அரசியல் நாகரீகம் எங்கே. என அறைகூவல் விடுத்தார். அண்ணாவே உயர்ந்த தலைவர். அவர் வழியிலே நாங்கள் என தன் இடிமுழக்கத்தை நிறைவு செய்தார் தலைவர் வைகோ.
உணர்வான தலைவரின் பேச்சை பாராட்டினார்கள் பொதுமக்கள்.
அந்த நேரத்தில், சங்கொலியின் முன்னாள் பொறுப்பாசிரியர் திரு.க.திரு நாவுக்கரசு மற்றும் அய்யா சேதுராமன் அவர்களையும் சந்தித்து உரையாடினார் தமிழின முதல்வர் வைகோ.
செய்தி சேகரிப்பு: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment