மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் 24.11.2015 அன்று எழுதிய கடிதம், இன்று தாயகத்தில் கிடைக்கப் பெற்றது.
கடித விவரம் வருமாறு:
அன்புள்ள வைகோ அவர்களுக்கு,
பீகார் சட்டமன்றத் தேர்தலில், மகா கூட்டணி பெற்ற மாபெரும் வெற்றிக்காகத் தங்களது பாராட்டுக்கு நன்றி.
பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்; அதற்காகத், தங்களுடைய வாழ்த்துகளுடன், எங்களால் இயன்ற மட்டிலும் மக்கள் நலன் காக்கக் கடமை ஆற்றுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
நிதீஷ்குமார்
என பீஹார் முதலமைச்சரின் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment