தமிழின முதல்வர், தலைவர் வைகோ அவர்கள் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும் மக்கள் நலக் கூட்டணியின் இடைவிடாத மழை வெள்ள நிவாரணப் பணிகள் இன்று 22-12-2015 மாலை வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதி மரியம் திருமண மண்டபத்திலும்(கே.என்.எஸ். டிப்போ அருகில்), நடைபெற்றது.
தமிழக முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் நிவாரணம் வழங்குவதற்காக வந்திருந்தார். முன்னதாகவே முத்தரசன், D.ராஜா ஆகியோர் வந்திருந்தனர். தலைவர் வந்த உடனே, இ.கம்யூனிஸ்ட் தமிழ் மா நில செயலாளர் திரு.முத்தரசன் அவர்கள் தலைவர் வைகோ வந்தவுடனேயே ...ஜெயபிரசாந்த் எங்கே, எனக் கேட்டு அவரை இ.கம்யூனிஸ்ட் அகில இந்திய செயலாளர் திரு.ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்து .தம்பி ஜெயபிரசாந்த் பற்றிய நிகழ்வுகளை திரு.ராஜா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது அவர் தலைவர் வைகோ அவர்களுக்கு உதவியாளராகவும் பணி புரிகிறார் என சொல்லி பெருமைபட்டார். தொடர்ந்து ஐயா நல்லக்கண்ணு அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்தார். பின்னர் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் தொடங்கின. மக்கள் வரிசையாக வர மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் வழிகாட்டினார்கள்.
அப்போது அண்ணன் திருமாவளவன் அவர்கள் வெள்ள நிவாரண உதவி நிகழ்வில் இணைந்தார். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் திருமா அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் வழங்கப்பட்ட நிவாரணம் வழங்கும் நிகழ்விற்கு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.,), மூத்த தலைவர் நல்லக்கண்ணு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment