சென்னையில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவில் (லட்சுமி தியேட்டர் அருகில்) இன்று 9-12-2015 காலை மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இணைந்து, பாய், துண்டு, பிரட், பன், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள் பாக்கெட், தீப்பெட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இதில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் ஓடி ஓடி நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இடைவெளி விட்டு ஒழுங்கான வரிசையில் நிவாரணங்கள் வழங்கப் பட்டது. கூட்டத்தினரை மாநில மதிமுக இளைஞரணி செயலாளர் அண்ணன் ஈஸ்வரன் அவர்கள், கழக நண்பர்களுடன் ஒழுங்கு படுத்தினார்கள். இந்த நிவாரண பணிகளில் இணையதள தோழர்களும் பெரும் உதவி புரிந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment