17-12-2015 நேற்று நெல்லை லாரா பாரடைஸில் நடந்த மதிமுகவின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மாநகர், நெல்லை புற நகர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அவைத்தலைவரும், ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கு பின்னர் ஒரு மனதான தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளராக வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும், நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளராக நிஜாம் அவர்களும், நெல்லை புற நகர் மாவட்ட மதிமுக செயலாளராக தி.மு.ராஜேந்திரன் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளராக ஆர்.எஸ்.ரமேஷ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
புதிதாக தேர்ந்தேடுக்கபட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அவைத்தலைவர் ஆகியோருக்கு...
தன் தந்தை "திமுக" கட்சியயை சேர்ந்தவராக இருந்தாலும் கல்லூரியில் படிக்கும்போது தலைவர் "வைகோ" வின் உணர்வு மிகுந்த, உணச்சி மிகுந்த பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்டு தலைவரிடம் அறிமுகமாகி "மதிமுக இணையதள அணியில் தன்னை இணைத்து கொண்டு தன் பணிகளுக்குமிடையில் கட்சியும் பணிகளை செய்து வருகிற இவர் ஒரு பொறியாளர். தன் பணி நிமித்தம் அரபு நாடான "ஓமன் " வந்த இவர் தான் உண்டு, தன் பணியுண்டு என்று இருக்காமல். கட்சியால் எந்த பலனும் இல்லை என்றாலும், இங்கு இருந்து கொண்டே விருப்பட்டு தான் ஏற்று கொண்ட நேசமிகு தலைவனுக்கும், விருப்பட்டு தான் ஏற்று கொண்ட நேசமிகு கட்சிக்கும் ஏதாவது ஒரு வகையில் பணியாற்ற வேண்டுமென்று அரபு நாட்டுக்கு வந்த பின்பும், தன்னிச்சையாக "வைகோ" மேல் பிரியம் கொண்டு அவர் பால் இது வரை பாசம் கொண்டுள்ள "வைகோ" வின் முரட்டு பக்தர் திரு."அறந்தை அலி", மற்றும் தன் சமூதாயத்தில் தீவிர பற்று கொண்டாலும், எந்த ஜாதி வெறியோ, சமூக வெறியோ, இன வெறியோ, அல்லாமல் ஒட்டு தமிழகத்திற்க்கும் குரல் கொடுக்கும் "வைகோ" என்ற ஒரு நேர்மையான தலைவன் இந்த தமிழகத்தை முதல்வராக தமிழகத்தில் ஆண்டால்தான் தான் சார்ந்த சமூதாயம் மட்டுமல்லாமல் எல்லா சமூகமும் ஒன்று போல் உயர்வார்கள் என்று "வைகோ" யும் தினமும் தொழும் "திரு. மாகின் சுலைமான்" போன்ற தீவிரமான "வைகோ" வின் மேல் பற்று கொண்ட நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "ஓமன் மறுமலர்ச்சி இணையதள அணி" யயை தொடங்கி கட்சி செய்திகளையும், தலைவர் பேச்சுகளையும், "video" பதிவுகளையும் புகைப்படங்களையும், இங்கே பதிந்து நம் அனைவரையும் உற்சாகமடைய செய்யும் "ஓமன் மறுமலர்ச்சி மதிமுகவின் தலைவர் பொறியாளர் "மறுமலர்ச்சி மைகேல்" அவர்கள் சார்பாகவும், "வைகோ" என்ற 2 எழுத்து மந்திரதலைவரால் ஈர்க்கப்பட்டு தன் சொந்த ஊரில் ஆண்ட, ஆளும் கட்சிகாரர்களின் பல எதிர்ப்புகளையும் கடந்து தானும், தன் சகோதரருமாக இருவர் மட்டும் சேர்ந்து "மதிமுக" வின் கொடி கம்பத்தை நாட்டி, அதில் கொடியை ஏற்றி பறக்க விட்டு பின்பு அந்த ஊர் இளைஞர்கள் பலரையும் ஈர்த்த கட்டடகலை பொறியாளர் திரு."பிரேம் ஆனந்த் " சார்பாகவும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை "தமிழக அரசியல், மற்றும் அரசு நிர்வாகங்களில் நடக்கும் அட்டுழியங்களை கண்டு மனதினுள் நினைத்து வெம்பி கொண்டு இதை தையிரியமாக தட்டி கேட்க தமிழகத்தில் ஒருவருமே இல்லையா ?" - என்ற விரக்த்தியில் அரசியலில் பட்டும் படாமல் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருந்தவர். அது சமையத்தில் தற்செயலாக நண்பர்கள் மூலமாக தலைவர் "வைகோ" வின் மேடை பேச்சுகளையும், எந்த வித ஆதாயமும் தேடாமல் மிக நேர்மையாக, ஒட்டுமொத்த தமிழர்களுக்காக பொதுவாக திரு. "வைகோ" அவர்கள் குரல் கொடுக்கும் பேச்சையும், போராட்டங்களையும் பார்த்து ஆச்சிரியப்பட்டு இவருக்கு எல்லா திறமைகளுமே இருந்தும் ஏன் தமிழக மக்கள் அவருக்கு வெற்றி வாய்பையும் கொடுக்கா விட்டாலும் ஒட்டு மொத்த தமிழர்களுக்காக தொடர்ந்து "வைகோ" அவர்கள் ஓடி ஓடி உழைப்பதயும் கண்டு நாம் ஏன் இவருக்கு துணையாக இருக்க கூடாது என்று தன்னைதானே கேட்டுக்கொண்டு தலைவர் "வைகோ" வின் பால் ஈர்க்கப்பட்டு இனி "வாழும் வரை வைகோ" என்று முழக்கமிட்டு கொண்டு "வெறி கொண்ட வேங்கை " யாக மாறி மறுமலர்ச்சி மதிமுகவின் மேல் அளவிலான பாசமும் நேசமும் கொண்டு "ஓமன் மதிமுக" வின் ஒட்டு மொத்த கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றும் பாசமும் நேசமும் நிறைந்த பொறியாளர் "வெறி கொண்ட வேங்கை விஸ்வநாதன்" அவர்கள் சார்பாகவும், மற்றும் எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் "வைகோ" என்ற தலைவன் பால் ஈர்க்கப்பட்டு தலைவர் புகழ் பாட தாமாகவே முன் வந்து "ஓமன் மதிமுக இணையதள அணி" யில் இணைந்து கொண்ட பழையவர்கள், புதியவர்கள் சார்பாகவும் ஆக ஒட்டு மொத்த "ஓமன் மதிமுக"வினர் சார்பாகவும் வாழ்த்தி வரவேற்கிறோம்"
மதிமுக அன்பர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான வேண்டுகோள் :-
இப்படியாக மேலே குறிப்பிட்டவர்கள் அனைவரும் எந்தவித பட்டம், பதவி, பணம்,உட்பட எந்த பலனும் எதிர் பாராமல் தாய் தமிழகத்தை முன்னேற்றி விட எதிர்கால தன் சந்ததியினர் சீரழிந்து விடாமல் சீரும் சிறப்புமாக வாழ வைக்க இந்த "வைகோ" வால் தான் முடியும். தற்போதைய சீரழிவுகளில் இருந்து மீண்டு வர ஒரே தீர்வு "வைகோ" தான் என்று தன்னலம் கருதாமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் தலைவரின் பின்னால் இருக்கும் வரை யாராலும் "வைகோ" வை வீழ்த்த முடியாது. நம்மை விட்டு சென்று விட்டவர்கள் ஏதோ ஒன்றுக்கு சபலப்பட்டு போய் விட்டார்கள். நி்ச்சியமாக வருந்துவார்கள். பிற்காலத்தில் திரும்பவும் தங்களை "வைகோ" வோடு இணைத்து கொள்வார்கள். ஆகையால் தயவுசெய்து அவர்களை மிக இழிவுபடுத்தி பேசாதீர்கள். அவர்களை மிக கேவலபடுத்தி பதிவுகளை போடாதீர்கள். அவர்களை ஊதாசீனப்படுத்தி பேசாதீர்கள்." இது போல உள்ள தொண்டர்களை கொண்ட கட்சியயை விட்டு வந்தது நல்லதுதான் " - என்று நினைக்கும்படியாக நடந்து கொள்ளாதீர்கள். "பின்பு மற்ற கட்சி தொண்டர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது" என்று பொதுவானவர்கள் நினைக்கும்படியாக நடந்து கொள்ளாதீர்கள். கட்சியயை விட்டு போனவர்களை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள். இதை விட கள்ளம் கபட நாடகமாடி பட்டம், பதவி பணம் ஆசை காட்டி நம் கட்சி அன்பர்களை அழைத்து சென்ற கயவர்களை விமர்சனம் செய்யுங்கள். அது போல் நம் கட்சியின் சிறப்பை கட்சிக்கு வெளியே உள்ள அடுத்தவர்களிடம் எடுத்து செல்லுங்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு வெளியே இருக்கும் அவர்களை "வைகோ" வின் பால் கவர்ந்து இழுக்க வேண்டிய வேலைகளை பாருங்கள். அதுதான் நீங்கள் கொண்ட தலைவனுக்கு செய்யும் மதிப்பும் மரியாதையும்...!!! - இதுவரை இதை பொறுமையாக படித்த தலைவர் "வைகோ" வின் பால் ஈர்ப்பு கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி வணக்கம்"...!!!
சுபா. வெங்கட்ராமன் (கலிங்கப் பட்டி)
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment