மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 17.12.2015 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை வரை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள லாரா பாரடைசில் திருநெல்வேலி புறநகர், திருநெல்வேலி மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய /நகர /பேரூர் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.
கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி, அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment