நெல்லையில் மூன்று மாவட்ட (குமரி, நெல்லை. தூத்துக்குடி) கலந்துரையாடல் துவங்கியது. மூன்று மாவட்ட நிர்வாகிகள் மிக்க எழுச்சியோடு வந்துள்ளனர். குழந்தையின் ஆபத்தை தடுக்க சிறகை விரித்துக்கொண்டு ஓடி வரும் கோழியை போல ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தார்கள். திருநெல்வேலி சீமையே விழாகோலத்தில் காணப்பட்டது.
அதில் தலைவர் வைகோ அவர்களுக்கு குமரி மாவட்ட தொண்டரணி சார்பாக ராட்சத ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டது. கழக துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் வந்திருந்தனர்.
சமாஜ்வாதி கட்சியின் மாநில பொறுப்பாளர் முருகன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மறுமலர்ச்சி திமு கழகத்தில் இணைந்தனர்.
பின்னர் கழக முன்னணி நிர்வாகிகள் உரையாற்றினார்கள், பேசிய வைகோ அவர்கள், ஊழலை எதிர்த்து போராடுகிற நானே ஊழல் திமுகவுடன் கூட்டணி வைக்க முடியுமா? இன்னொன்று அதிமுக திமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். நம் கட்சி இன்னும் வலுவடையும். இந்த கழகத்தை காப்பாற்றுகிறவர்கள் தொன்டர்களாகிய நீங்கள் தானே என தொண்டர்களை பார்த்து சொன்னது மிகுந்த ஆர்ப்பரிப்பு ஏற்ப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக கலந்துரையாடல் நடக்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment