Tuesday, December 22, 2015

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நிவாரணம் வழங்கிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக நிவாரண உதவி நிகழ்வு இன்று 22-12-2015 காலை 10 மணி அளவில் நடந்தது. தலவர்க்ள் ஓவ்வொருவராக வந்தார்கள். அப்போது தலைவர் வைகோவிடம், வெள்ள பாதிப்பை முறையிட்டார்கள் தாய்மார்கள். 

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.இராஜா வருகை தர அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்ன ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். முத்தரசன் முதலே வந்துவிட்டார்.

தொல்.திருமாவளவன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதற்கு மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருமே ஒத்துளைப்பு வழங்கி மக்களை வரிசைப்படுத்தி முறையான நிவாரணம் பெற செய்தனர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment