இன்று 7-12-2015 அன்று மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் திங்கள் சந்தையில், குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சம்பத் சந்திரா அவர்களின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். ஏராளமான கழக தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் மதிமுக மாவட்ட அவைத்தலைவர் கே.பி.தேவராஜ் அவர்களின் மகளின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், மழை நிவாரண பணிகளில் மூன்று நாட்கள் நான் ஈடுபடும் வரை எந்த பத்திரிகை, தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் தகவல் கொடுக்க வில்லை. புகைப்பட கருவிகளை கூட கொண்டு செல்ல வில்லை. ஆனால் அதையும் தாண்டி நவீன காலத்தில் அலைபேசி வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது என தெரிவித்தார்.
மணவிழாவில் பங்கேற்ற அருட்தந்தை ராஜன் அவர்கள், புதிதாக குடும்ப உறவில் இணையும் மணமக்களை வாழ்த்துவதோடு தமிழகத்தில் புதிதாக உருவாகி இருக்கும் கூட்டு இயக்கமான மக்கள் நல கூட்டியக்கத்தை வாழ்த்துவோம். அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோவை வாழ்த்துவோம். பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் சேர்ந்த கூட்டு தான் தமிழகத்திற்கு தேவை என வாழ்த்தி பேசினார்.
பின்னர் மக்கள் நல கூட்டணியின் அங்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
குமரி மாவட்ட மதிமுக அவைத்தலைவரும், மணமகளின் தந்தையுமான கேபி.தேவராஜ் அவர்கள் நன்றியுரை கூறினார்.
இந்த திருமண விழாவில், கலந்து கொண்ட மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நடைக்காவு ஊராட்சியை சேர்ந்த மாற்று கட்சி இளைஞர்கள் மதிமுக இணையதள வேங்கை தியோடர் ஜாண் அவர்கள் தலைமையில் மதிமுகவில் இணைந்தனர்.
இந்த மண விழாவில் ஏராளமான கழக தொண்டர்கள், மதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment