வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் (அப்பல்லோ மருத்துவமனை எதிரில்) பகுதியில் இன்று 10-12-2015 காலை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நிவாரணத்தை சரியாக முறைப்படுத்தி வழங்கினார்கள். இதை ஏராளமான பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வரிசையாக வந்து நன்றியோடு பெற்றுகொண்டார்கள்
அந்த நெருக்கமான பணிகளுக்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், நோய்கள் மக்களை தாக்கி விடுமோ என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது, நிவாரண பணிகளில் கண்காணிப்பு குழுவேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் நிவாரணம் வழங்கும்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் எந்த கட்சி அடையாளமும் இல்லாமல் மக்கள் நலக் கூட்டணி நலன் முன்னிறுத்தப் பட்டது.
No comments:
Post a Comment