சிவகாசி - சித்துராஜபுரத்தில் ம.தி.மு.க. தீவிரத் தொண்டர் கோவிந்தராஜ் நேற்று 29.12.2015 இரவு சில ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை சித்துராஜபுரத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் ஆறுதல் கூறினார்.
வைகோவைக் கண்டதும், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். அங்கு கொந்தளிப்பான நிலை காணப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார்கள். வைகோ அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
கொலைக் குற்றவாளியான ராமேஷ் பாண்டியன் சித்தி முத்துலட்சுமி கூட்டத்திலிருந்து ஓடிவந்து வைகோவை கட்டிச் சேர்ந்து பிடித்து, நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்னைக் காப்பாத்துங்க ஐயா, என்னைக் காப்பதுங்க ஐயா என்று கதறி அழுதுகொண்டே இருந்தார். வைகோவோடு வந்த முன்னணியினரும், தோழர்களும் சுற்றிலும் அரண் அமைத்து நின்றனர். கூட்டமோ கொந்தளித்துக்கொண்டு இருந்தது.
குற்றவாளிதான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, கொலையில் சம்மந்தம் இல்லாத அவரது தாயாரோ, சித்தியோ தண்டிக்கப்படக் கூடாது என்ற உணர்வோடு, அங்கு முகாமிட்டிருந்த மாவட்ட கால்வதுறை அதிகாரி அரவிந்தன் அவர்களுக்கு அனுப்பி, காவல்துறை வாகனத்தை வரவழைத்து, அதில் முத்துலட்சுமியை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தார் வைகோ.
இது இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் நடக்கும் மோதல், அல்ல. தனிப்பட்ட சில ரவுடிகளின் செயல்தான் என்றும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இதை சாதி மோதலாக மாற்ற முயற்சிக்கும் சமூக விரோத சக்திகளிடம் இரு சமூக மக்களும் சிக்கிக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைகோ உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
அடைக்கலமாக வந்த குற்றச் செயலில் ஈடுபடாத முத்துச் செல்வியை கொந்தளித்து நின்ற கூட்டத்தினரிடம் சிக்கி உயிரிழப்புக்கு ஆளாகாமல் பாதுகாத்ததோடு, சாதி மோதலுக்கு வழி வகுக்காமல் நல்லிணக்கம் நிலவ வலியுறுத்திய வைகோ அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழ் நாடு தேவர் பேரவையின் மாநில இணைப் பொதுச்செயலாளர் கே.என்.கே.சங்கரநாராயணன் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment