Tuesday, December 15, 2015

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்கள்!

மதிமுக பொதுசெயளாளர் வைகோ அவர்கள் அதிகாலை கடலூர் வருகை தந்தார்கள். ஆட்டோ ராஜ் அவர்களும் அண்ணாநகர் கோபி அவர்களும் தலைவருடன் வருகை தந்தனர்.

பகல் நிகழ்வில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் வில்வநகர் பகுதி மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில், இன்று 15.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நிவாரணப் பொருட்களை தலைவர்கள் வழங்கினார்கள். அதில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

இந்த நிவாரணத்தில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 1000 பேருக்கு மேற்ப்பட்டவருக்கு கடலூர் நகரத்தில் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில், கழக நிர்வாகிகள் தொண்டர்கள், மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment