Sunday, December 13, 2015

இரண்டாவது நாளாக ஸ்கைவாக் பகுதியில் குப்பை அகற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேற்று ஆயிரம் விளக்கு பகுதிகளில் குப்பைகள் அதிகாமாக காணப்பட்டதால் சுத்தம் செய்தனர். மேலும் மாலையில் அமைந்த கரையில் சுத்தம் செய்தனர். பின்னர் ஸ்கைவாக் சென்று சுத்தம் செய்தனர். ஆனால் ஸ்கைவாக் பகுதிகளில் அதிகமாக குப்பைகள் காணப்பட்டதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் வராமலிருக்க, 13-12-2015 இன்றும் ஸ்கைவாக் பகுதிகளில் குப்பைகளை அகற்றினார்கள். 

இன்று காலை துப்பவரவு பணிக்காக முதலாகவே வந்தார் தலைவர் வைகோ அவர்கள். பின்னர் பணிகள் தொடங்கியபோது திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோரை வரவேற்றார் வைகோ.

பின்னர் கூட்டணி தலைவர்களான, அண்ணன் திருமாவளவன், திரு.முத்தரசன் ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் இணைந்தனர். மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்களும் தலைவர்களோடு இணைந்து குப்பைகளை அகற்றினார்கள்.

ஒன்றிணைந்து செயல்பட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு பொதுமக்கள மனமார நன்றி கூறினார்கள். 

ஓய்வு நாளென்றும் பாராமல், தலைவரின் சொல் கேட்டு ஓயாமல் உழைக்கும் தோழர்களின் ஒற்றுமை அதிமுக திமுகவினைரை அதிர்ச்சியடைய செய்கிறது என்றே சொல்லலாம்.

குப்பைகள் அதிகமாக காணப்பட்டதால் ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து குப்பைகளை அள்ளினார்கள் மாநில இலக்கிய அணி பொருளாளர் அண்ணன் சாத்தூர் கண்ணன் மற்றும் ஆட்டோராஜ் அவர்கள்.


அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை மக்கள் நலக் கூட்டணி செய்வது மக்கள் மத்தியில் ஒரு எழிச்சியை காண முடிகிறது. இதனால் மக்கள் நலக் கூட்டணியின் மக்கள் நலன் சார்ந்த பணிகள் மக்களுக்கு தலைவர்களே நேரடியாக செய்வதால் மக்கள் அனைவருமே இப்படிபட்ட தலைவர்கள் கைகளில்தான் ஆட்சி பொறுப்பை கொடுக்க வேண்டுமென பேசுகிறார்கள். இவர்கள்தான் மக்களின் கஸ்டங்களை உணர்ந்தவர்கள், ஏழைகளை வாழ வைப்பவர்கள் என நினைத்து தலைவர்களுடன் மக்களும் ஈடுபட்டனர்.

பணிகள் முடிவடைந்து குப்பையாகவும் நோய்தொற்றுப் பகுதியாக இருந்த பகுதிகளை தமிழக மக்கள் முதல்வர் வைகோ அவர்கள் சந்தணம் போல மணக்கச் செய்துள்ளார். 

வரும் சட்டமன்ற  தேர்தல் 2016 ல் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், மக்கள் அனைவருமே குடும்பமாக கூட்டணியாக சந்தோசமாக வாழ வழி செய்து கொடுப்பார்கள். எனவே தமிழக மக்களே சிந்தியுங்கள். ஊழலற்ற ஆட்சியை ஏற்ப்படுத்த வாக்களிப்பீர். கூட்டணி தலைவர்களை ஆட்சியில் அமர்த்துவீர்.

செய்தி: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment