17-12-2015 இன்று நெல்லை லாரா பாடடைஸ்ஸில் நடைபெறுகிற மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக கலந்தாய்வு கூட்டத்திற்கு குமரி மாவட்ட மதிமுகவினர் ஏராளமான வாகனத்தில் சென்று கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். இதில் முன்னாள் மாவட்டச்செயலாளர் தில்லை செல்வத்தின் ஓட்டுனரும் வலது கரமாக திகழ்ந்த தோழா்கள் அகிலனும் ஜெரோம் ஜெயக்குமார் ஆகியோரும் நெல்லையில் தலைவர் வைகோவை சந்தித்தனர். அந்த கலந்துரையாடல் நிகழ்வில் அந்த சந்திப்பு செகிழ்ச்சியாக இருந்தது.
குமரி மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகளான மாநில சட்ட துறை செயலாளர் வெற்றிவேல், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு தலைவர் வழக்கறிஞர் சம்பத் சந்திரா, குழித்துறை ஜெயராஜ், தக்கலை ஒன்றிய செயலாளர் ஜேபி சிங், மாவட்ட துணை செயலாளர் ஆஸ்டின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த ராஜன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சாஜி, முஞ்சிறை ஒன்றிய மாணவரணி செயலாளர் தியோடர் ஜாண், சுசீந்திரம் பேரூர் கழக பாலசுப்ரமணியம், தொண்டர் படை தளபதி சுமேஷ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment