சங்கரன்கோவில் வாணி சவுண்ட் சர்வீஸ் மற்றும் வாணி மெடிக்கல் உரிமையாளர் வாணிபிச்சையா.
தலைவர் வைகோவின் தோளில் நெருப்பாக தகிக்கும் கருப்புத்துண்டுக்கு சொந்தக்காரர்.
1986 ஆண்டு வாணிபிச்சையா புதல்வி திருமணத்தை சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில் கலையரங்கத்தில் வைகோ அவர்கள் தலைமை தாங்க வந்த போது கருப்பு சால்வை அணிவித்து வரவேற்ப்பு கொடுத்தார் வாணிபிச்சையா. அதுநாள் வரை பல வண்ண சால்வை அணிந்தாலும் அன்று முதல் இந்த கருப்பு சால்வையே தலைவர் வைகோவின் தோளில் நிரந்திரமாக இடம் பிடித்து விட்டது.
அன்று முதல் இன்று வரை தலைவர் வைகோ அவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு சால்வை வழங்குவது வாணி பிச்சையாவின் வழக்கம். வாணி பிச்சையா வழங்கும் சால்வையையே தலைவர் வைகோ இன்றளவும் பயன்படுத்துகிறார் என்பது அன்பின் இலக்கணத்திற்கு சான்று.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment