மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற 21.12.2015 திங்கள்கிழமை அன்று காலை 09.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் 21.12.2015 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கும், கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில், மதிமுக தலைமை அலுவலகமான சென்னை, தாயகத்தில் நடைபெறும்.
கழகத்தின் நிர்வாகிகளே! அனைவரும் தவறாது கலந்துகொண்டு, முக்கியமான முன்னேற்ற பாதையில் போகும்படியான முடிவுகளை எடுங்கள். வரும் 2016 நமது கூட்டணி ஆட்சியை பிடிக்கும் விதத்தில் திட்டங்களை தயார் செய்யுங்கள். வாக்குகள் எப்படி நமக்கு வந்து சேரும், அதற்கான களப்பணிகளி எப்படி, எப்போது அரம்பிக்கலாம் என கலந்தாலோசித்து நல்ல முடிவை அறிவித்து பணிகளை ஆரம்பித்து செயல் வடிவம் கொடுங்கள் என்று உங்களை ஓமன் மதிமுக இணையதள அணி மனதார கேட்டுகொள்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment