சென்னை மற்றும் கடலூரில் பெருமழை வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அந்தக் காலகட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள்.
பின்பு மழை வெள்ளத்தால் குப்பைக் காடாக இருந்த சென்னை மக்கீஸ் கார்டன், எம்.ஜி.ஆர்.காலனி, பொன்னுசாமி பிள்ளை தோட்டம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி, அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பி, சிரமமின்றி வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இந்நிலையில் நாளை 19.12.2015 காலை 10 மணி அளவில் தென்சென்னை மாவட்டம் - விருகம்பாக்கம் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெருவில் உள்ள அஞ்சலி மகாலில் நடைபெறுகிறது.
மாலை 3 மணி அளவில் மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி - எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி (பாந்தியன் சாலை) அருகிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில், ஒருங்கிணைப்பாளர் வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.,), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டு நிவாரணம் வழங்க ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment