கடலூர் மாவட்ட வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் ஆருயிர் சகோதரர்களான மாணவர் மன்ற மாநில செயலாலர் சசிகுமார், கரூர் மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் முகேஷ் ஈழவன், பெரம்பலூர் மாவட்ட மாணவர் மன்ற அமைப்பாளர் சைமன் ராஜ், துணை அமைப்பாளர் தமிழருண், பவுன் ராஜ், சுடலைமுத்து, சுப்ரமணியம், தாமரைக்கண்ணன் ஆகியோர்கள், நிவாரண பொருட்களோடு, இரவு முழுதும் பயணித்து வெள்ள நிவாரண உதவிகளை மக்களுக்கு அளித்தனர்.
சென்ற இடமெல்லாம், மிகுந்த இடர்பாடுகள்தான் இருந்தன. ஆனாலும் அவர்கள் என்ன நேர்ந்தாலும் மக்களின் தேவையை பூர்த்திசெய்வதே நோக்கம் என்று செயல்பட்டு மக்களின் பசியாற்றினார்கள்.
கடலூரில் நிவாரண பணியின் போது மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் முதியோர்களுக்கும், பார்வையற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கும், கடலூர் துறைமுகம் பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நகராட்சி பள்ளில் நூறுக்கு மேற்ப்பட்டவர்களுக்கும் உதவி பொருள்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய அன்பு சகோதரர் தஞ்சை வினோத்குமார் அவர்களுக்கும், அதை சிரமம் பாராமல மாணவர் மன்ற தளபதிகளுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில், இதயம் கனிந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment