4-12-2015 நேற்று, திருவள்ளூர் மாவட்ட கழகச் செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவனின் பூந்தமல்லி அட்கோ நகர் இல்லத்தில் இருந்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு புறப்பட்டு வெள்ளம் பாதித்துள்ள காடுவெட்டி, புதுச்சத்திரம், முத்துகொண்டாபுரம் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் இரவு பாப்பா பீ நகர் குடியிருப்போர் நலச் சங்கம் உள்ளிட்ட பூவிருந்தவல்லியில் உள்ள முகாம்களில் இரவு உணவு வழங்கினார்.
இன்று 05.12.2015 சனிக்கிழமை காலை 9.45 மணி அளவில் எழும்பூர் புனித அந்தோணியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் வேட்டி சேலை. நைட்டி வழங்கினார்.
காலை 10 மணிக்கு பூவிருந்தவல்லி அட்கோ நகரில் இருந்து புறப்பட்டு வெள்ளம் பாதித்துள்ள காடுவெட்டி, புதுச்சத்திரம், முத்துகொண்டாபுரம் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதியம் 12.30 மணிக்கு மழை வெள்ளத்தால் பாதித்த திருவள்ளூரில், ஜமீன் கொரட்டூரில் வைகோ பார்வையிட்டார்.
இப்படி மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று ஆறுதல் கூறி பசியாற்றியும், உடமைகளையும் கொடுத்து பாதுகாக்கிறார். மக்களே இனிமேலாவது சிந்தியுங்கள். வருகிற தேர்தலில் மதிமுகவிற்கு வாக்களித்து வைகோவை ஆட்சியில் அமர வைத்து முதலமைச்சராக அழகு பாருங்கள். உங்கள் அனைவரது வாழ்வும் வளம் பெறும்.
No comments:
Post a Comment