இன்று 12-12-2015 காலை ஆயிரம் விளக்கு பகுதிகளில் கழிவுகளை அகற்றினார்கள். மேலும் மதியம் உணவருந்திவிட்டு அமைந்தகரையில் முட்டளவுள்ள கழிவுகளை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அகற்றும் பணியில் மாலையிலும் ஈடுபட்டனர்.
சகதியில் அகதிகளான மக்களோடு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட மதிமுக மகளிரணியினரும் கலந்துகொண்டு குப்பைகளை அகற்றினார்கள்.
தெருக்களில் குப்பைகளை அகற்றிவிட்டு, அன்னை மாரியம்மாள் பெற்ற மகன் மாரியம்மன் கோவிலை சுத்தம் செய்தார். அப்போது கோவில் வளாகத்தில் நக்கீரன் பத்திரிகைக்கு கடினமான குப்பை அகற்றும் பணிகளுக்கிடையிலும் பேட்டியளித்தார்.
மேலும் இந்த மாலை நேர சுத்தம் படுத்தும் பணியில் கம்யூனிஸ்ட் தோழர்களும் கலந்துகொண்டனர். குப்பையை அகற்றியதால், தமிழின முதல்வர் வைகோ அவர்களின் பணியை அங்கு வசிக்கும் தாய்மார்கள் மனதார வாழ்த்தினார்கள்.
அமைந்த கரை குப்பைகளை அகற்றிவிட்டு அடுத்த கட்ட பணியாக ஸ்கைவாக் நோக்கி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் புறப்பட்டு சென்று அங்குள்ள குப்பைகளையும் அகற்றினார்கள். குபை அள்ளும் பணி நிறைவடையாததால், நாளையும் இதே இடத்தில் பணிகள் தொடரும் என தமிழின முதல்வர் வைகோ தெரிவித்தார்.
இந்த அயராத பணிகளுக்கிடையில் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள், பம்பரம் தொலைக்காட்சிக்காக இ.கம்யூனிஸ்ட் செயலாளர் அண்ணன் முத்தரசன் அவர்களிடம் வாழ்த்துரை பெற்றுக்கொண்டார்.
பின்னர், இன்றைய பணிகள் முடிந்து தலைவர் வைகோ விடை பெற்றார், அனைவரும் நாளை வருகையை எதிர்நோக்கி வீடு சென்றார்கள்.
செய்தி:மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
No comments:
Post a Comment