சென்னை எழும்பூர் புதுப்பேட்டை பகுதியில் இன்று மதியம் மக்கள் நலக்கூட்டணி சார்பில் மழை நீரால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
தலைவர்கள் வருவதற்கு முன்னதாகவே அனைத்து பொருட்களும் ஏர்ப்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சிறார்களும் இதில் அடங்குவர். சிறார்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டதில் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி பெருகியது. மக்கள் நலக் கூட்டணியினால் திட்டமிட்டு ஒழுங்காக நெரிசலின்றி அமைதியாக நடந்தது நிவாரணம் வழங்கும் பணி. மக்கள் நலக் கூட்டணி ஆட்சியும் இப்படி ஒழுங்காக நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நிவாரணம் வழங்கும் நிகழ்வில், பேட்டி எடுக்க வந்த ஊடகங்களுக்கு, அண்ணன் திருமாவளவனை பேட்டி கொடுக்க செய்து வைகோ தனது பெருந்தன்மையை எடுத்துக்காட்டினார்.
ஏராளமான பொதுமக்கள் இதில் பயன்பெற்றனர். இதை எழும்பூர் பகுதி நிர்வாகிகள் சிறப்பான ஏற்ப்பாடாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment