சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.-ல் தீக்குளித்து இறந்த ஹேமந்த்குமார் உடலுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஹேமந்த்குமார் குடும்பத்தாருக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதுடன் அவரது குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மற்றவர்களுக்காவது நீதி கிடைக்க வேண்டுமென்று பொது மேலாளர் அலுவலத்துக்கு முன்னாலே தீக்குழித்து இறந்தாரே, இதற்கு பிறகாவது ரயில்வே நிர்வாகம் மத்திய அரசு, ஓர வஞ்சனை செய்யாமல் மற்ற மாநிலங்களிலெல்லாம் 2013 வரை அப்பிரண்டிஸ் பயிற்ச்சி முடித்தவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த அவல நிலை. அப்பிரண்டிஷ் முடித்த மாணவர்கள் பல முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கும் கோரிக்கை வைத்தும் நீதி கிடைக்கவில்லை.
சிறு வயதிலே இறந்த ஹேமந்த் குமாரின் குடும்பத்திற்காவது முதலில் வேலை வழங்க வேண்டும். தமிழர்களுக்கு சொந்த மண்ணில் வேலை வழங்க வேண்டும். பிற மாநிலத்தவருக்கு போலி ஆவணத்துடன் வருபவருக்கு வேலை திணிப்பதோடு தமிழர்களை ஒரம் கட்டுகிறது மத்திய அரசு. இவருடன் 25 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். எனவே இங்கே உள்ள ஐ.சி.எப் ல் பயிற்ச்சி பெற்ற அப்பிரண்டிஷ்களுக்கு இங்கே வேலை வழங்கப்பட வேண்டும். இந்த ஹேமந்த் குமாருடைய கோர மரணத்திற்கு ஐ.சி.எப் நிர்வாகம்தான் பொறுப்பாகும் என வைகோ கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment