இன்று (08-12-2015) திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெரும்பூர் ஊராட்சி தாங்கல் நகர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி எடையாத்தூர் கிராம மக்களுக்கு மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் திரு.வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா நில செயலாளர் திரு.முத்தரசன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திரு.சம்பத் ஆகியோர் தரைப்பாலம் வெள்ளத்தால் உடைந்தாதால் படகு மூலம் நிவாரண பொருட்களை கொண்டு சென்று தானும் பயணித்து அக்கரை சென்று 3000 பொதுமக்களுக்கு நிவாரண உதவி அளித்தனர்.
அப்போது தலைவர்களிடம் மக்கள் தரைப்பாலத்தை புதுப்பித்து தரும்படியும் தடுப்புச்சுவர் கட்டித்தர சொல்லியும் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்டு அவர்கள் கோரிக்கையை ஆமோதிப்பதாகவும். அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும், அரசு தற்போது அளித்துள்ள நிவாரண உதவி போதாது என்றும், உரிய நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதால்தான் இவ்வளவு பெரிய வெள்ள சேதம் வந்தது எனவும் செய்தியாளர்களுக்கு மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் திரு.வைகோ அவர்கள் பேட்டி அளித்தார்கள்.
அப்போது பேசிய தலைவர் வைகோ அவர்கள், நேரு ஸ்டேடியத்தில் உள்ள பொருட்கள் படம் ஒட்டுவதினால் கால தாமதமாகிறது என் குற்றம் சாட்டினார். காக்க வேண்டிய காவல்துறையே நிவாரண பொருட்களை அள்ளிச் சென்றது என முறையிடும் இரும்புலிச்சேரி பொதுமக்கள் வரும் வழியில் கல்பாக்கம் சட்ரஸ் பொய்கை கரை காலணி மக்கள் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிகளை வந்து பாருங்கள் என அழைத்து சென்று காண்பித்தனர். தலைவர் வைகோ அவர்களை அன்புடன் வரவேற்கும் பொதுமக்களும் ஊடக நிருபர்களும் வரவேற்றனர். அவர்களுக்கும் நிவாரண பொருட்களை தலைவர்கள் வழங்கினார்.
No comments:
Post a Comment