Sunday, December 13, 2015

நுங்கம்பாக்கம் பகுதியில் மழை நீரால் பாதித்த மக்களுக்கு நிவாரணமளித்தனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!

இன்று காலை சென்னை ஸ்கைவாக் பகுதியை சுத்தப்படுத்திய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மதிய இடைவேளைக்கு பின், நுங்கம்பாக்கம் பகுதியில் வெள்ள நிவாரண உதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தனர்.


சென்னை நுங்கம்பாக்கம் பகுதி மக்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டு அல்லலுறுகின்றனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று 13-12-2015 மாலை நடைபெற்றது. பெரியவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கும் முறையான உதவிகள் வழங்கப்பட்டது.


இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் வைகோ, சிபிஎம் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் தோழர் சவுந்தர்ராஜன், சிபிஐ மாநில செயலாளர் தோழர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


அப்போது தொலைக்காட்சி நிரூபர்கள் கூடியிருந்தனர். அவர்களுக்கு பேட்டியளித்த சீத்தாராம் யெச்சூரி அவர்கள், இன்று காலை முதலே நான் அனைத்து மழை நீர் பாதித்த இடங்களையும் பார்வையிட்டேன். மத்திய அரசின் உதவி போதாது, இந்த பேரிளப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுப்பினேன் தமிழ்நாட்டிற்கு உதவி செய்யவெண்டுமென்று. ஆனால் இங்கு வந்து பார்த்தபொழுது பெயரளவுக்கு கூட சொல்ல கூடியவகையில் மத்திய அரசின் உதவி வந்து சேரவில்லை. குறிப்பாக செண்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்தான் இந்த அளவுக்கு இழப்புக்கு காரணம். இதனால் அதன் உண்மையை கண்டறிய தற்போதைய சென்னை நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த பேரிளப்பிற்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும் பெரும் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் ஒரு ஒருங்கிணைப்போடு எந்த உதவிகளையும் செய்யவில்லை என கருதுகிறேன் என கூறினார்.


பின்னர் திரு.யெச்சூரி விடைபெற்றார். நலத்திட்ட உதவி முடிந்து தலைவர் வைகோ அவர்களும் விடை பெற்றார். இதில் ஏராளமான கழக உறுப்பினர்கள் பக்கபலமாக் உதவியளிக்க பணியாற்றினார்கள். இப்போது மக்கள் அனைவரும் மக்கள் நலக் கூட்டணி பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள். எனவே வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்று மக்கள் பணியாற்ற எப்போதும் ஓமன் மதிமுக இணையதள அணி பக்கபலமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிப்பீர் , வசதியோடு வாழ்வீர்

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment