மழை நீரால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று சென்னையில் பசியாற்றிவிட்டு, 6-12-2015
இன்று காலை கலிங்கப்பட்டி வீட்டிற்கு வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்.
நெல்லை
மாவட்டம் கலிங்கப்பட்டியில் 11 ஆண்டுகளுக்கு முன் தலைவர் வைகோ அவர்களின் முயற்சியால் தூர்வாரப்பட்டது கலிங்கப்பட்டி
கண்மாய். இப்போது மழை நீர் காரணமாக கண்மாய் நிரம்பியது. நீர் நிரம்பி வழியும் சூழலில் பெரிய
கண்மாயின் கரையை வலுப்படுத்தும் பணியில் தலைவர் வைகோ கிராமத்து மக்களை
ஒருங்கிணைத்து அதை சரி செய்யும் வேலையை அவரே முன்னின்று செய்தார்.
பரம்பரை
பரம்பரையாக பணக்கார குடும்ப பின்னணியில் வந்த இவர், தன்
சுட்டு விரலை காட்டினாலே போதும் பணி செய்ய பல ஆயிரம் பேர் காத்திருக்கையில் கர்வம்
கொள்ளாமல், மற்றவர்கள்
சும்மா நிற்க, நாம்
மட்டும் இதை ஏன் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு கவுரவமும்
பார்க்காமல் தன்னுடைய
72 வயதிலும்
இளைஞரை போல் தான் பிறந்து வளர்ந்து விளையாடி சுற்றித்திரிந்த தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில்
நிரம்பி வரும் கம்மாய் [குளத்தின்] கரை எக்காரணம்
கொண்டும் உடைந்து விட கூடாது என்ற முன்னேற்பாடாக பலப்படுத்தும் பணியில் இன்று காலை
முதல் களத்தில் நிற்கிறார் தலைவர் வைகோ.
இப்படிபட்ட
தலைவனை, தனக்காக வாழாமல் தன் தாயக மக்களுக்காக வாழும் தலைவனை வருகிற தேர்தலிலாவது
முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வையுங்கள் தமிழர்களே! உங்களெ இரு கரம் கூப்பி
கேட்கிறொம். உங்களுக்காக அவரை முதலமைச்சர் ஆக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளின்
எதிர்காலத்திற்காக வாக்களித்து வைகோவை புனித ஜார்ஜ் கோடைக்கு அனுப்புங்கள்.
அப்போது உணர்வீர்கள் உங்கள் எதிர்காலம் எவ்வளவு மகிழ்ச்சியாக கழிகிறதென்று…
எங்கள்
தலைவனே!
என்ன தவம் நான் செய்தோம், உனக்கு தொண்டனாய் இருப்பதற்கு…
தங்க தொட்டிலில் பிறந்து,
தரையில் கால் படாமல் வளர்ந்து,
தமிழ் மொழியை தாய் மொழியாக பயின்று,
தாய் தந்தையால் சீராட்டி வளர்ந்த
தலைவா…
துயர் துடைக்கையில் தலைவனாய்,
தொண்டு செய்கையில் தொண்டனாய்,
தாயகம் காப்பதில் தமையனாய்,
போரட்டகளத்தில் முதல் போராளியாய்,
தனது பணியை செய்யும் தலைவா…
எங்களை தலைநிமிர வைத்தாய் தமிழகதில்…
என்ன தவம் நான் செய்தோம், உனக்கு தொண்டனாய் இருப்பதற்கு…
செய்தி: பல
முகநூல் நண்பர்களிடத்திலிருந்து…
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment