தமிழ்நாடு நூறாண்டுக் காலத்தில் கண்டிராத பலத்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு, தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது. இலட்சோப இலட்சம் குடும்பங்கள் வீடுகள், உடைமைகள் அனைத்தையும் இழந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையே பாழாகிவிட்டது. மீளமுடியாத துயரத்தில் மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மதுரையில் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற இருந்த மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ மற்றும் ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment