தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை நொடிப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும், தமிழினத்துக்காக தன் வாழ்நாளையே அற்ப்பணித்திருக்கும், எங்கள் உதிரங்களில் தமிழ் உணர்வேற்றிக் கொண்டிருக்கும், நாங்கள் எங்கள் வாழ்நாளில் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர், தமிழின முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
கடல் கடந்து வந்து, எங்கள் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு அயல்நாடுகளில் வேலைகள் செய்து வாழ்ந்து வந்தாலும், எங்கள் மனத் திரையிலே எம் தாய் தமிழக குடும்பங்கள் அல்லலுறுவது காணொளியாக உலாவிக் கொண்டிருக்கிறது. எங்கள் மனம் எங்கள் தமிழ் உறவுகளை எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழினத்திற்காக களப்பணியாற்ற வேண்டிய நாங்கள், வயிற்றுப்பசியை போக்க அயல்நாடுகளில் அடிமைகளாக வாழ்ந்தாலும், எங்கள் சொந்தங்களின் வயிற்றுப் பசியை ஆற்றவும் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு மட்டுமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நாங்கள் இல்லை. ஏனென்றால், நாங்கள் வைகோ என்ற புலியின் வேகத்தையும், புயலின் தாக்கத்தையும் கொண்ட காவியத் தலைவனின் வார்ப்புக்கள் ஆயிற்றே! எங்கள் தலைவனை தூரத்தில் இருந்து பார்த்து பழகியவர்கள் ஆயிற்றே! தலைவனின் கொடைப்பண்புகள் எங்கள் உதிரத்தில் பாய்ச்சப்பட்டுவிட்டதே!
தமிழக உறவுகள், மழை நீரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை பற்றி வேதனை அடைந்துள்ளோம். அனைத்தும் இருக்கிறது, ஆனால் ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்கும் உறவுகளை எண்ணி பரிதவிக்கின்றோம். இயற்கை அன்னையிடம் மன்றாடுகின்றோம். எங்கள் மக்களுக்கு பேரழிவை தாங்கும் சக்தியை தா என்று கேட்கிறோம்.
நாங்கள் "வைகோவின் வரிப்புலிகளடா" என்று மார் தட்டி, கொள்ளை அடிப்பவனிடத்தும், துரோகம் செய்பவனிடத்தும் வீர முழக்கமிடும் வண்ணம், எங்கள் தலைவன் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக பசியாற்றி, ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கிறார். எங்கள் தலைவனின் எண்ண ஓட்டத்தை நாங்கள் புரிந்துள்ளோம். "வைகோ" என்ற இரண்டு எழுத்துக்களால் சங்கமித்து "ஓமன் மதிமுக இணையதள அணி" என்று குடும்பமாக உறவாடும் நாங்கள், எங்கள் தலைவனின் கரங்களை வலுப்படுத்த, மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட சிறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, எங்களால் இயன்ற அனுப்பிய சிறு தொகை ₹68000/- தலைவர் வைகோ அவர்களுக்கு சென்றடைந்துள்ளது.
அந்த சிறு தொகையை தலைவர் வைகோ அவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நேரடியாக பயன்படுத்துவார் என்பதை தெரிவித்துக்கொண்டு, அன்பளித்த அனைத்து ஓமன் மதிமுக இணையதள அணி உறவுகளுக்கும், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment