மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் ஓமன் இணையதள அணி கண்மணிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
உணவருந்த செல்ல நண்பருக்காக காத்திருந்த போது எனது அலைபேசிக்கு இரண்டு குறுந்தகவல் வந்தது, அன்பிற்குரிய அண்ணன் அருணகிரி அவர்களிடமிருந்து... ஏதுமறியாதவனாய் அங்கலாய்த்துக்கொண்டு மறுகணமே அழைத்தேன். அண்ணன் அவர்கள் மைக்கேலா, நீங்கதானே ₹68000 அனுப்பிருந்தீங்க என்று கேட்டார். ஆம் அண்ணா என்றேன். சரி என்று சொல்லிவிட்டு மைக்கேல் லைனில் என்று சொல்லி கொடுத்தார்.
என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, தனக்கென்று ஒரு தனி வழ்வு இல்லை என்று சொல்லி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்நாளும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும், ஆகாயம் தேடாத ஆதாயம், தமிழின முதல்வர், உலக தமிழ் மக்கள் அனைவரும் பேச தவமிருக்கும் தலைவர் வைகோ அவர்கள், காந்த குரலில், இந்த எளியவனிடம்...
நான் வைகோ பேசுகிறேன், நல்லா இருக்கீங்களா என்றார்.
ஐயா நல்லா இருக்கிறேன். உங்களின் ஒரு வார்த்தைக்காக எவ்வளவு நாள் ஏங்கி க்கொண்டிருந்தேனோ இன்று அது நிறைவேறி இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி ஐயா என்றேன்.
வெளிநாட்டில் போய் இவ்வளவு கஸ்டப்பட்டு சம்பாதித்ததை அனுப்பிருக்கீங்க என்றார்.
ஆம் ஐயா, தமிழ்நாட்டில் ஒருபெரும் தலைவருக்கு அனுப்பினால், அது முறையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்று அதீத நம்பிக்கையால் நண்பர்களிடத்தில் பிரித்து உங்களுக்கு அனுப்பி தந்தோம் ஐயா.
சரி. அந்த பணம் முறையாக பொருட்கள் வாங்கி மக்களிடத்தில் கொடுக்கப்படும். எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.
சரி ஐயா மிக்க நன்றி ஐயா. எங்களுடைய கவலையெல்லாம் உங்களை பற்றிதான் ஐயா. நீங்கள் ஓய்வில்லாமல் தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கடந்த ஜூன் 25 ஆம் தேதி உங்களை நாகர்கோயிலில் சந்தித்த போது கூட உங்கள் உடல் நலனை பற்றி கேட்டேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள ஐயா.
சரி. கன்னியாகுமரியில் மாவட்ட செயலாளர் போன உடன் அனைவருமே நம்மோடு வந்துவிட்டார்கள். வெற்றிவேலை மாவட்ட செயலாளராக நியமித்திருக்கிறோம்.
ஆம் ஐயா, அண்ணன் வெற்றிவேல் அவர்களுக்கு நான், தில்லை செல்வம் போன உடனே அழைத்தேன். தலைவருக்கு நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லியிருந்தேன் ஐயா. ஆம் எனக்கு தெரியும் ஐயா அவர் மாவட்ட செயலாளர் என்று. நன்றி ஐயா.
சரி நன்றி.
இப்படியாக என்னுடைய உரையாடல் தலைவருடன் இருந்தது.
எந்த இயக்கத்தில் உலகமே போற்றும் தலைவன் தன் கட்சி தொண்டனுக்கு அழைத்து பேசி நன்றி சொல்லுவார்கள். தொண்டனின் மனதை அறிந்த தலைவன் அல்லவா. பாசத்தை ஊட்டி உதிரத்தில் உணர்வேற்றும் தலைவன் அல்லவா. கழகத்தை ஒரு குடும்பமாக வார்ப்பித்து, அதை உணர்வுபூர்வமாக அனைவரையும் அரவணைத்து செயல்படுத்த, இந்த பூவுலகில் எங்கள் தலைவனை போல யாராவது உண்டா.
குஞ்சுகளுக்கு ஆபத்து வரும்போது, தாய் ஒடி வந்து காப்பாத்துவதை போல நீங்கள்தான் கழகத்தை காப்பாற்றுகிறீர்கள் என்று தொண்டர்களிடம் சொன்ன தலைவனின் கரங்களை வலுப்படுத்துவோம்.
இப்படிப்பட்ட தன்னலமில்லாத தலைவனின் பாசத்திற்காக கோடிக்கணக்கான என்னை போன்ற தொண்டர்கள் இருக்கின்றோம் என்பதை எதிரிகளுக்கு உணர்த்துவோம். வரும் காலம் வைகோவின் காலம் என்பதை எடுத்துக்காட்டுவோம். தமிழின முதல்வர் வைகோவை தமிழக முதல்வராக புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க சபதம் ஏற்போம்.
விதைத்துக் கொண்டிருக்கிறோம், அறுவடைக்கு தயாராவோம் 2016 ல்...
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment