மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ (மறுமலர்ச்சி தி.மு.க.), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டூ கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுததலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், இன்று 23.12.2015 தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உரையாடினார்கள்.
அப்போது 70 நிமிடங்கள் அந்த கலந்துரையாடல்கள் விரிவாக இருந்திருந்தன. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அனைவருமே விஜயகாந்த் அவர்களை மக்கள் நலக் கூட்டணிக்கு அழைத்தனர். அனைவருமே வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவும் பேசியிருக்கிறார்கள். விஜயகாந்த் அவர்கள் மக்கள் நலக் கூட்டணியில் இணைய நல்ல முடிவுக்காக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுகள் முடிந்ததும் விஜயகாந்த் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை வெளியில் சென்று வழியனுப்பி வைத்தார்.
மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கின்ற நிலையில், விஜயகாந்த் அவர்களும் இணைந்தால் மேலும் வலிமை பெறும். வாசன் அவர்களும் இதில் இணைய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment