மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், 12.12.2015 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் ரோடு மக்கீஸ் கார்டன் (அப்பல்லோ மருத்துவமனை எதிரில்) உள்ள பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்.
மாலை 3 மணி அளவில் அமைந்தகரை பொன்னுசாமி பிள்ளை தோட்டம் (பீ.பீ.கார்டன்) ஸ்கைவாக் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஈடுபடுகிறார்கள் என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment