Friday, December 11, 2015

மதிமுக மருத்துவரணி 2 ஆவது நாளாக சென்னையில் மருத்துவ முகாமிட்டுள்ளனர்!

மதிமுக பொதுச்செயலாளர் தமிழின முதல்வர் தலமை ஏற்றிருக்கும் மதிமுகவின் மருத்துரணி சார்பில் சென்னையில் மழை நீரால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமிட்டு மருத்துவம் செய்து வருகிறது மதிமுக மாநில மகளிரணி மருத்துவர் ரோஹையா தலைமையிலான மருத்துவரணி. இன்றைய மதிமுக மருத்துவ முகாமை திவுட்திடல் சத்தியவாணி முத்து நகர் பகுதியில் சிறப்புற அமைத்திருந்தார் துறைமுக பகுதி செயலாளர் எம்.ஈ.நாசர் அவர்கள். 

இந்த மருத்துவ முகாமை செதியாளர்கள் படம்பிடித்தனர். அப்போது மதிமுக மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிரூபர்களிடம் பேட்டியளித்தார். 

மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தாலும் ஒவ்வருவரின் பிரச்சினைகளை நிதானமாக கேட்டறிந்து மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியது குறிபிடத்தக்கது. மதிய உணவு நேரத்தில் கூட மருத்துவர் ரோஹையா தலைமையிலான மருத்துவர்கள், இடைவிடாது மக்கள் பணியில் வேகமாக இயங்கி மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினார்கள்.


உணவில்லையேலும், மக்கள் நலமுடன் வாழ, சிறப்பாக அனைத்து மக்களுக்கும் மருத்துவ உதவிகளை செய்த மருத்துவர் ரோஹையா தலைமையிலான மதிமுக மருத்துவரணிக்கு ஓமன் மதிமுக இணையதள அணி நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment