Saturday, December 12, 2015

பம்பரம் டீவியின் சோதனை ஓட்டம் ஆரம்பம்! மதிமுகவின் மருத்துவ சேவை!

கழகத்தின் மறுமலர்ச்சி வேங்கைகளே! நேற்று (11-12-2015) சென்னையில் மதிமுக மருத்துவரணி நடத்திய மருத்துவ முகாம் நடந்தது. இதில் பம்பரம் டீவிக்காக வீடியோக்களை, பயனாளிகளிடமிருந்து அவர்கள் கருத்துக்களை சேகரிக்கபட்டது. இதை மதிமுக இணையதள அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

மருத்துவர் ரோஹையா தலைமையிலான மருத்துவ முகாம் பற்றிய பொதுமக்களின் கருத்துக்கள் சோதனை ஓட்டமாக பம்பரம் டீவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. எனவே அனைத்து கழகம் சார்ந்த சம்பவங்கள், பொது பிரச்சனைகள் பற்றிய செய்திகளை பம்பரம் டீவிக்கு அனுப்பினால் அதை தரமான முறையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

"பம்பரம் டீவி இணையத்தின் இதய குரலாக" இணையத்தை உபயோக்கிற அனைவரும் பார்க்கலாம். தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிய www.pambaramtv.com என்ற வலைதளத்தை எப்போதும் காணலாம்.

மதிமுக இணையதள அணியினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த பம்பரம் டீவியானது அனைத்து செய்திகளையும் நடுநிலையோடு, உண்மை செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதை கழக நண்பர்கள் அனைவரும் பகிர அன்போடு கேட்டுகொள்கிறோம். மேலும் பார்வையாளரான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment