இன்று 19.12.2015 காலை 10 மணி அளவில் தென்சென்னை மாவட்டம் - விருகம்பாக்கம் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெருவில் உள்ள அஞ்சலி மகாலில் மழை வெள்ளம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்படைந்த மக்களுக்கு, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
அப்போது தொலைக்காட்சிகளுக்கு தலைவர் வைகோ பேட்டியளிக்கையில், ஏழையின் துயர் துடைக்க தொடர் நிவாரண பணிகளில் மக்கள் நலக் கூட்டணி ஈடுபட்டுள்ளது நீர்வழி ஆதார ஆக்ரமிப்புகளுக்கு அதிமுக திமுக இரு கட்சிகளே காரணம். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜய்காந்த் அவர்களை சந்திப்பார்கள். அதற்கான நேரம் விரைவில் வரும். வணிகர்களுக்கு குறிப்பாக சிறு வணிகர்களுக்கு அரசு உதவ வேண்டும்.
துப்புரவு பணிகள் ஒரு சாரார் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை போக்குவதற்கு எடுத்துக்காட்டாகத்தான் நாங்களே அந்தப் பணியில் ஈடுபட்டோம். துப்புரவு தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய உதவியை இந்த அரசு செய்ய வேண்டும் என கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment