Wednesday, March 30, 2016

சாத்தூர் வடக்கு ரத வீதியில் தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரம்!

30.03.2016 மதியம் 1:20 மணிக்கு சாத்தூர் வடக்கு ரத வீதியில் நடைபெற்ற தே.மு.தி.க- மக்கள் நலக் கூட்டணியின் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாபிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தொண்டர்கள் ஏராளமானோர் கூடியது வெற்றிக்கு வித்திட்டதாகும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி தோழர்கள் மதிமுகவில் இணைகிறார்கள்!

கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி இணைந்து மாற்றுக்கட்சி தோழர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சி சாராதவர்களை மதிமுகவில் இணைக்கும் விழாவை கரூர் V.M.C மகாலில் ஞாயிற்றுக்கிழமை 03-04-2016 காலை 10 மணி அளவில் நடக்கிறது. 

சிறப்பு அழைப்பாளர்களாக கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் பொடா அழகுசுந்தரம், கழக மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், கரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் கபினி கே.கே.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

மாவட்ட கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, March 29, 2016

சங்கரன் கோவிலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

நெல்லை சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் 29.03.2016 இன்று மாலை தே.மு.தி.- மக்கள் நலக் கூட்டணி ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள், ஆள் மாற்றமும் , ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதே தவிர அடிப்படை மாற்றம் ஏற்படவில்லை. ஒரு வளமான தமிழகத்தை உருவாக்க தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர். இரு துருவ அரசியலை வீழ்த்துவோம். மனோ கல்லூரிகளுக்கு சொந்த கட்டடத்தை தேமுதிக , மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கட்டிக் கொடுப்போம். குடும்பம் இல்லையென்று சொல்லும் ஜெயலலிதாவிற்கு எதற்கு கொடநாட்டு எஸ்டேட். ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எங்களுக்குத் தான் உரிமை உள்ளது என பேசினார்.


இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள், தொங்கு சட்டசபை அமையாது. உறுதியாக தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி தனிப்பெரும் வெற்றியை ஈட்டும் என உறுதி பட தெரிவித்தார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் உரையாற்றுகையில், மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்கப்போவது தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியே. எல்லா கிராமங்களிலும் கண்காணிப்பு படையை நாம் கட்ட வேண்டும் . இந்த தேர்தல் நமக்கு விடப்பட்ட சவால். மிகவும் கவனமாக களப்பணி ஆற்றுங்கள். திமுகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பாளையங்கோட்டையில் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரம்!

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரம் இன்று 29-03-2016 காலையில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோரும், தேமுதிக முன்னணி நிர்வாகி சந்திரகுமாரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் திருமாவளவன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி சின்னமான மோதிரத்தை ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தங்கத்தில் திருமாவளவனுக்கு அணிவித்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அவர்கள், மனசாட்சிக்கு உண்மையாக பணியாற்றிய முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தள்ளி கொலை செய்த இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும். ஒரு தொழிற்சாலையாவது தென் தமிழகத்தில் துவக்கினார்களா? பெப்சி கம்பெனிக்கு இரண்டு இலட்சம் லிட்டர் தண்ணீரை தாரைவார்த்தது தான் அதிமுகவின் சாதனை என ஆளும் கட்சி மீது விமர்சனம் வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா முத்தரசன் அவர்கள் பேசுகையில், 4 கட்ட பிரச்சாரத்தில் 4 கட்சிகள். 5ம் கட்ட பிரச்சாரத்தில் 5 கட்சிகள். திமுக தலைவரின் சின்னக் குழந்தை சொல்கிறது. ம.ந. கூ யை பினாமி என்று. எங்களுக்கு பினாமி என்றாலே என்னவென்று தெரியாது. பினாமிகளோடு வாழ்வதால் தான் அவருக்கு அதே சிந்தனை இருக்கிறது.

பொன். இராதாகிருஷ்ணன் அவர்களே, நீங்கள் கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் தருவதாக சொன்னீர்களே! அந்த பணம் எப்போது வரும்.

பஞ்சத்துக்கான கூட்டணி அல்ல , மக்கள் நலக்கூட்டணி. மக்களின் பஞ்சத்தை போக்க வந்த கூட்டணி. யாரிடமும் நாங்கள் இரகசியப் பேச்சு நடத்தவில்லை என பேசினார்.

தொடர்ந்து தொல்.திருமாவளவன் பேசுகையில், வெறும் அரசியல் ஆதாயத்திற்காக நாங்கள் இணையவில்லை. அதையும் தாண்டிய ஒரு உணர்வு உள்ளது. தமிழக அரசியலின் சரித்திரத்தை புரட்டிப் போடுவதற்காக நாங்கள் வலிமை பெற்றுள்ளோம். இப்படி ஒரு கூட்டணி அமையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நம் மீது கருணை காட்ட மாட்டாரா என நேற்று வரை காத்துக்கொண்டிருந்தவர்கள், இன்று மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்த பிறகு விஜயகாந்த் அவர்களை பூஜ்ஜியம் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம், மதுக்கடைகளை மூடுவோம், திமுக - அதிமுக வை வீழ்த்துவது என்ற மூன்று முக்கியப் புள்ளிகளில் தேமுதிகவும் மக்கள் நலக்கூட்டணியும் உடன்படுகிறது. ஜெயலலிதாவின் கால்களில் அவர்கள் விழவில்லை. அவரைச் சுற்றியுள்ள அதிகாரத்தின் காலில் தான் அவர்கள் விழிகிறார்கள். நியாயவான்கள் அனைவரும் கோபக்காரர்களாகத் தான் இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஒழிய வேண்டும். கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள், ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாங்கள் முன்னணியில் நிற்போம். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவோம் என சொன்ன அம்மையார் ஜெயலலிதா அவர்களே சொன்னதை செய்தீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதியான தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தின் 10 ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்களின் கற்றல் திறனில் கடைக்கோடியில் இருக்க காரணம் திமுகவும், அதிமுகவும் தான். ஐ ஏ எஸ், ஐ ஐ டி தேர்வில் தமிழகத்தில் இருந்து செல்வோர் மிகமிக குறைவு. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மொத்தம் 65 பேர் மட்டுமே. ஆந்திர அரசு பள்ளிகளில் படித்து 4000 க்கு மேலும், மரட்டியத்திலிருந்து 1500 க்கு மேற்பட்டோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தான் திமுக ,அதிமுக கூறும் வளர்ச்சியா..? எனவு கேள்வி எழுப்பினார்.

இறுதி உரையாற்றிய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பாதாள நிலவறைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டு இருக்கின்றது.

நேற்று ஒரு பெரிய கண்டெய்னரும், தார்பாலின் போட்டு மூடப்பட்ட 10 லாரிகளும் அந்த பங்களா வளாகத்திற்குள் சென்றுள்ளன. எனவே தேர்தல் ஆணையம் உடனே அந்த பங்களாவை சோதனை போட வேண்டும். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு நேற்று நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தச் செய்தியை இன்று காலை இந்து ஆங்கில ஏடு ஒருவரிகூட வெளியிடவில்லை.

ஆனால் தமிழ் இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள், தினத்தந்தி நாளிதழில் பூதக்கண்ணாடி போட்டு தேடிப் பார்த்தால் ஒரு நாலு வரி இருக்கிறது. தினமணி ஒருவரிகூட வெளியிடவில்லை.

தினமலரும், தினகரனும் செய்தியை நன்றாக வெளியிட்டிருக்கின்றார்கள். நீங்கள் ஒன்றும் ஜெயலலிதாவை குற்றம் சாட்ட வேண்டியது இல்லை. இவ்வாறு வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார் என்று போட்டால் போதுமே.

எங்களைப் பற்றி பரப்பப்படுகின்ற அவதூறுகளை கொட்டை எழுத்தில் வெளியிடுகிறீர்கள் இது என்ன பத்திகை தர்மம்? ஜெயலலிதாவுக்கு அஞ்சுவது ஏன்? என பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 5 ரயில் மறியல் போராட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவிப்பு!

உலக மக்கள் அனைவரின் பசி போக்கிட, உழைத்து உணவு படைத்திடும் உழவர் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் நட்டப்பட்டு வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் வங்கிகளில் தாங்கள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மௌனம் சாதிக்கின்றது.  கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இதைக் கருத்தில் கொண்டு அமையப் போகும் மக்கள் நலக் கூட்டணி அரசு, விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். 

உல்லாச வாகனங்கள் வாங்க பெறும் வங்கிக் கடனுக்கு வட்டி வீதம் 7 விழுக்காடு தான். ஆனால் டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்களுக்கான வங்கி கடனுக்கு வட்டி விகிதம் 14 விழுக்காடு எனும் அவல நிலையிலும், பெற்ற கடனை பெரும் பகுதியை செலுத்திவிட்டு மீதமுள்ள இரண்டு தவணைகள் மட்டும் பாக்கி வைத்திருந்த தஞ்சை விவசாயி பாலனின் டிராக்டரை ஜப்தி செய்ததையும், அவர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு காரணமானவர்களையும், ஜப்தி நடவடிக்கையில் கடைபிடிக்கப்பட்ட அவலம் தாங்காமல் விவசாயி அழகரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், மேற்கொண்டு ஜப்தி நடவடிக்கையை நிறுத்தக் கோரியும், ஏப்ரல் 5 ஆம் தேதி, தமிழகம் எங்கிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததோடு, அந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அதனுடைய தலைவர்  தெய்வசிகாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, ஏப்ரல் 5  இல் நடைபெறும் இரயில் மறியல் போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்பதோடு, அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, March 28, 2016

மக்கள் நலக் கூட்டணி-தேமுதிகவின் மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார கூட்டம் நாகர்கோயிலில்!

நாகர்கோவில் நாகராஜா திடலில் 28.03.2016 இன்று மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க மாற்று அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அலை கடலெனத் திரண்ட இன்றைய தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி நாகர்கோவில் பொதுக்கூட்ட காட்சிகள் மக்கள் வெள்ளம் வெள்ளம் போல காணப்பட்டது.

இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தேமுதிகவின் சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை குமரி மாவட்ட கூட்டணி கட்சியினர் செய்திருந்தனர்.

அதில் பேசிய தேமுதிக மாநிலதுணைச் செயலாளர் சந்திரகுமார், இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு குமரியில் பூஜ்ஜியமே மிஞ்சும் என பேசினார்.

தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்போது, தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடே பாராட்டுதலுக்குரியது. மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேமுதிகவின் முதல்வர் வேட்பாளரோடு தொகுதி உடன்பாடு கொண்டுள்ளோம். வெற்றி பெற்றால் விஜயகாந்த் அவர்களே தமிழகத்தின் முதல்வர். மாற்றம் வேண்டுமென்றால் அனைவரும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என பேசினார்.

கம்யூனிஸ்டு தலைவர்கள் பேசும்போது, தாய் தமிழகத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த மண், குமரி மண். எதிரிகளால் நாம் எப்போது விமர்சிக்கப் படுகிறோமோ, அப்போது சரியான திசை வழியில் செல்கிறோம் என அர்த்தம். பொன்னாரும், ஜெயலலிதாவும் கொடுத்த வாக்குறுதியான தனியார் வனபாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய என்ன செய்தார்கள். முந்திரித் தொழிலை பாதுக்காப்பதாக சொன்ன பிஜேபி கச்சா முந்திரியை இறக்குமதி செய்து மக்களுக்கு துரோகம் செய்தார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம். குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம். ஊழல் கட்சிகளை தோற்கடியுங்கள். ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும், தென் மாவட்டங்களில் உள்ள முந்திரித் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. இந்தத் தொழில்களை பாதுகாப்பதாக சொன்ன பாஜக அரசு, கச்சாப்பொருள் இறக்குமதிக்கு வரிவிதித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது. தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கூட்டணி அரசு பாதுகாக்கும் என பேசினார்கள்.

மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசும்போது, ஊழல் இல்லாத ஆட்சி, மது இல்லாத ஆட்சி, சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளால் நடத்தப்படும் ஆட்சி உருவாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு குமரி மாவட்ட வாக்காளப் பெருமக்கள் எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பதுக்கல். மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார்!

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:-

அன்புடையீர், வணக்கம்.
தங்களுடைய மேலான நடவடிக்கைக்காக அதி முக்கியம் வாய்ந்த பிரச்சினையை தங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். கடந்த 27 ஆம் தேதி இரவு மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கண்டெய்னர் ஏற்றிய லாரி கிராமத்துச் சாலையைக் கடந்து சென்றபொழுது, அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் லாரியின் ஓட்டுநரிடம் கண்டெய்னரில் என்ன பொருள் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு நிலக்கரியும், விறகும் ஏற்றிச் செல்கிறோம் என்று பதில் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ. 1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.

அதைவிட மேலும் அதிர்ச்சியைத் தரக்கூடிய வகையில் முற்றிலுமாக தார்பாலின் உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் இன்று (28.03.2016 ) காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றுள்ளன.

லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மேடம் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறுதியாக நம்புகிறேன். மேலும் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.

எனவே தாங்கள் உறுதியான நடவடிக்கை மூலமாக சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் வருவதற்கும், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும் வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

உத்தரகாண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி; அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை! வைகோ கண்டனம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் முதல்வர் ஹரீஷ் ராவத் அமைச்சரவை கலைக்கப்பட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உத்தரகாண்ட் ஆளுநர் கே.கே.பாலைச் சந்தித்து ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர். அதனைப் பரிசீலித்த ஆளுநர் மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புக் கொடுக்காமல், குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருப்பதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. மத்திய அரசு உத்தரகாண்ட் அரசை பதவி நீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

உத்தரகாண்ட் அரசு கலைக்கப்பட்ட உடனேயே பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று கூறி இருக்கிறார். கடந்த காலங்களில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது, காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும், ஜனநாயகப் படுகொலை நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டிய பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி செய்ததையே பின்பற்றி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்து இருக்கின்றது. சட்டமன்றத்தைக் கலைக்காமல், குதிரை பேரத்தை நடத்தி உத்தரகாண்ட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சி செய்வது ஜனநாயகப்படுகொலை ஆகும். ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வருவதற்கு குதிரை பேரம் நடத்தும் பா.ஜ.க.வின் முயற்சியை குடியரசுத் தலைவர் முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, March 27, 2016

அரபு நாட்டில் உதவியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றக் கோரி இந்தியப் பிரதமருக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் வைகோ கடிதம்!

தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிழைப்புக்காக 23 மீனவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அஜ்மன் நகருக்குச் சென்றார்கள். கடுமையான உழைப்போடு பொருளீட்டி தங்களையும், தங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு இன்னல்களைக் கடந்து கனவுகளோடு சென்றவர்களின் வாழ்வில் இடிவிழுந்தது போன்று அங்கு நடந்த சம்பவம் அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பெரிய இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.

அரபு நாடுகள் சட்டப்படி மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், அரபு நாட்டைச் சார்ந்த இரண்டு மீனவர்கள் 01.04.2014 அன்று தங்களுடன் அழைத்துச் சென்றனர். எதிர்பாராத விதமாக 14.04.2014 அன்று இரவில் மீனவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அரபு நாட்டைச் சார்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்.

அந்த நாட்டுச் சட்டப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் இரக்கமில்லாமல் தாக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்கள் அப்பாவிகள் என்று முடிவு செய்து வழக்கில் சாட்சிகளாக மட்டும் சேர்க்கப்பட்டார்கள்.

காவல்துறையின் நடவடிக்கையால் மீனவர்கள் அனைவரும் தங்கள் வேலையை இழந்தனர். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. உண்ண உணவின்றி, உடையின்றி, வேலையின்றி, செலவுக்குப் பணமின்றி வீட்டுக் காவலில் வைத்துள்ளதுபோல அவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடல் கடந்து வாழும் நமது தமிழர்கள், திரு. ஸ்டாலின் பீட்டர் என்ற தோழர் மூலமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் பரிதவித்து வரும் அவர்களைக் காப்பற்றிடக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

வைகோ அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கும் மனிதாபிமானத்தோடு விரைந்து நடவடிக்கை எடுத்து, வாழ வழியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியை உடனடியாக எடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

கவலையோடு, இருண்ட எதிர்காலத்தோடு, கண்ணீரோடு தவிக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் நம்பிக்கை ஒளியை ஊட்டிட ஆவன செய்ய வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வைகோவுடன் சீத்தாராம் யெச்சூரி சந்திப்பு! மாலையில் மநகூ தலைவர்கள் சந்திப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் மார்ச் 27 ஞாயிறு அன்று சந்தித்து உரையாடினார். சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் பேசிய அவர்கள் ஜோதிர்மயி பாசு மறைவின் போது அவர் உடலோடு சுமார் 5 மணி நேரங்கள் பயணித்த அனுபவத்தை வைகோ பகிர்ந்துகொண்டார். சீதாராம் யெச்சூரியும் அந்த சூழலை நினைவுகூர்நதார்.



பின்னர் மாலையில் மக்கள் நலக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் திருப்பூர் எஸ்.துரைசாமி, அ.கணேசமூர்த்தி, சி.பி.எம். சார்பில் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, பி.சம்பத் சிபிஐ சார்பில் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் து.ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஓமன் மதிமுக இணையதள அணி

மறுமலர்ச்சி திமுக சென்னை மண்டலத் தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் தற்போது தாயகத்தில் துவங்கியது!

தாயகத்தில் தலைவர் வைகோ அவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிதியாக மறுமலர்ச்சி திமுக சென்னை மண்டலத் கழகங்கள் சார்பாக தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம் நடந்தது.

வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக ரூ.16,00,000 தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

வடசென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி வீடியோ முருகன் அவர்கள் தேர்தல் நிதியாக ரூ.1,00,000 வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் முதல் தவணை தேர்தல் நிதியாக ரூ.14,00,000 வழங்கப்பட்டது.

மதிமுக மகளிரணி துணை செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் 100000 தேர்தல் நிதி வழங்கினார்.

மத்திய சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 54,00,000 லட்சம் வழங்கப்பட்டது.

எந்த கட்சியையும் சாராத தேநீர் கடை நடத்தி வரும் திரு.அன்சூர் அவர்கள் தன் சொந்த சேமிப்பிலிருந்து ரூபாய் 50.000 ம் தேர்தல் நிதியாக கொடுத்து இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்கு தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி