நாகர்கோவில் நாகராஜா திடலில் 28.03.2016 இன்று மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க மாற்று அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அலை கடலெனத் திரண்ட இன்றைய தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி நாகர்கோவில் பொதுக்கூட்ட காட்சிகள் மக்கள் வெள்ளம் வெள்ளம் போல காணப்பட்டது.
இதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தேமுதிகவின் சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை குமரி மாவட்ட கூட்டணி கட்சியினர் செய்திருந்தனர்.
அதில் பேசிய தேமுதிக மாநிலதுணைச் செயலாளர் சந்திரகுமார், இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு குமரியில் பூஜ்ஜியமே மிஞ்சும் என பேசினார்.
தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும்போது, தேமுதிகவின் தேர்தல் நிலைப்பாடே பாராட்டுதலுக்குரியது. மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேமுதிகவின் முதல்வர் வேட்பாளரோடு தொகுதி உடன்பாடு கொண்டுள்ளோம். வெற்றி பெற்றால் விஜயகாந்த் அவர்களே தமிழகத்தின் முதல்வர். மாற்றம் வேண்டுமென்றால் அனைவரும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என பேசினார்.
கம்யூனிஸ்டு தலைவர்கள் பேசும்போது, தாய் தமிழகத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த மண், குமரி மண். எதிரிகளால் நாம் எப்போது விமர்சிக்கப் படுகிறோமோ, அப்போது சரியான திசை வழியில் செல்கிறோம் என அர்த்தம். பொன்னாரும், ஜெயலலிதாவும் கொடுத்த வாக்குறுதியான தனியார் வனபாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய என்ன செய்தார்கள். முந்திரித் தொழிலை பாதுக்காப்பதாக சொன்ன பிஜேபி கச்சா முந்திரியை இறக்குமதி செய்து மக்களுக்கு துரோகம் செய்தார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வருவோம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம். குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம். ஊழல் கட்சிகளை தோற்கடியுங்கள். ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கும், தென் மாவட்டங்களில் உள்ள முந்திரித் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. இந்தத் தொழில்களை பாதுகாப்பதாக சொன்ன பாஜக அரசு, கச்சாப்பொருள் இறக்குமதிக்கு வரிவிதித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது. தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கூட்டணி அரசு பாதுகாக்கும் என பேசினார்கள்.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசும்போது, ஊழல் இல்லாத ஆட்சி, மது இல்லாத ஆட்சி, சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளால் நடத்தப்படும் ஆட்சி உருவாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு குமரி மாவட்ட வாக்காளப் பெருமக்கள் எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment