மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி பயண பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. அங்கே உரையாற்றிய தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் "மகத்தான களப்பணியாற்ற காத்திருக்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இது கூட்டம் மாநாடு போல் உள்ளது.
மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை என கூறியவர்கள் எல்லாம் வாயடைத்து போவார்கள் இந்த கூட்டத்தை பார்த்து. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸை வெல்ல முடியுமா என்ற கேள்வி மமதையாக உருவாகியது. அப்போது அறிஞர் அண்ணா தலைமையில் சிறு சிறு கட்சிகள் ஒன்று சேர்ந்து காங்கிரஸ்க்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கியது. அப்போது ஊடகங்கள் கூட கேலி சித்திரங்களை வெளியிட்டது. கிண்டலாக, அதில் காங்கிரஸ் பந்தய குதிரை எனவும்,அண்ணா தலைமையிலான கூட்டணியை கழுதை மேல் பயணிப்பதை போன்று அந்த சித்திரம் இருந்தது. தேர்தலும் முடிந்து முடிவுகள் வந்தன. எதிர்பாரா விதமாக அண்ணா தலைமையிலான கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை அமைத்தது. பந்தய குதிரையான காங்கிரஸ் வீழ்ந்தது.
அதே போல் இன்று இந்த மாற்று அணியை பலவாறு விமர்சிக்கிறார்கள் மக்கள் மாற்றத்தை விரும்பிவருகிறார்கள் என்பதை மறந்து. 1967-ல் அண்ணாவை போல் 2016-ல் மக்கள் நலக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment