மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு "தீக்கதிர்" டிஜிட்டல் பதிப்பு துவக்க விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்கிஸ்ட்) அலுவகத்தில் 23-03-2016
அன்று மாலை நடைபெற்றது. இதில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமை உரையாற்றினார்.
டிஜிட்டல் பதிப்பின் ஆசிரியர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா அவர்கள் தீக்கதிர் எண்மப் (டிஜிட்டல்) பதிப்பைத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து உரை நடத்திய தோழர் என். சங்கரய்யா அவர்கள்,
பத்திரிக்கைகள் நேர்மையாகவும் அரசுகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமலும் பணியாற்ற வேண்டும்.
தமிழக அரசியலில் தற்போதுதான் உண்மையான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி இன்று ஏற்படுத்தியுள்ள உடன்பாடு மகத்தான உடன்பாடு.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
என்று விளக்கினார் சங்கரய்யா அவர்கள்.
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தீக்கதிர் முதல் செய்தியைப் பதிவேற்றம் செய்தார்.
தேமுதிக-வின் டாக்டர் ரவீந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தீக்கதிர் டிஜிட்டல் பதிப்பிற்கு வாழ்த்துரை
வழங்கினார். அப்போது பேசிய திருமாவளவன், தேமுதிக-விடம் தொலைக்காட்சி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நாளேடுகள் உள்ளன. இது மக்கள் நலக் கூட்டணிக்கு பலம். அதேவேளை சமூக வலைத்தளங்களை நாம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என
பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் வாழ்த்துரையை
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும் தீக்கதிர் நாளிதழின் பதிப்பாளருமான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கு தீக்கதிர் மற்றும் தீக்கதிர் எண்மப் பதிப்பு வாளாகவும் கேடயமாகவும் இருக்கும் என்றார்.
பின்னர் பேசிய மக்கள் நலக்
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், வாழும் பகத்சிங் தோழர் சங்கரய்யா என
புகழாரம் சூட்டினார். பகத்சிங் பிறந்த ஊரிலிருந்து மண்ணைக் கொண்டுவந்து எனது வீட்டில் வைத்திருக்கிறேன்.
உசேன் போல்ட்டைப் போல மக்கள் நலக் கூட்டணி முதல் அடியிலேயே பாய்ந்து செல்கிறது. ஒரு தகப்பன் பிள்ளைக்குச் சொல்வதுபோல் பல்வேறு செய்திகளை தோழர் சங்கரய்யா அவர்கள் கூறினார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இராஜாஜி ஐ எதிர்த்து கருப்புக்கொடி காட்டியவர் தோழர் சங்கரய்யா.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை மதுரை நேஷனல் தியேட்டரில் மாணவர் கூட்டத்திற்கு அழைத்துப் பேச வைத்ததோடு அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றவர் தோழர் சங்கரய்யா.
இந்தியா சுதந்திரம் அடைந்த அதே வேளையில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த உடன் மதுரையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சங்கரய்யா. உழைக்கும் மக்களுக்காக எப்போதும் களத்தில் நின்று போராடுகிறது தீக்கதிர்
என பேசினார்.
தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் குமரேஷ் அவர்கள் நன்றியுரை
வழங்கினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment