சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் அமைந்துள்ள தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த அவர்களை சந்தித்தார்கள். பின்னர் ரகசிய ஆலோசனைகளுக்கு பின்னர், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடுக்கான ஒபந்தம் கையெழுத்தானதை அறிவித்தார்கள். இதனால் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 124 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 124 தொகுதிகளில் இன்னும் கூட்டணியில் சேருகிற கட்சிகளுக்கு விஜயகாந்த் அவர்கள் பிரித்துக்கொடுக்க வேண்டுமென்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் விஜயகாந்த் அவர்கள் பேசும்போது தேமுதிகவிற்கும் சேர்த்து ஒருங்கிணைப்பாளராக இருப்பார் எனவும், கூட்டணி ஆட்சிதான் எனவும் அறிவித்தார்.
இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும், முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள். தேமுதிக தரப்பினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment