21.03.2016 இன்று சென்னை- வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் "சாதி ஆணவக் கொலைகளை" கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டம் ஆயத்தமாக இருந்த நேரத்தில், தலைவர் வைகோ அவர்கள் வருகையில், பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது பேட்டியளித்த வைகோ அவர்கள், சாதி வெறியை தூண்டுபவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் கொலை பாதகர்கள். ஆவணக் கொலைகள் நீடிக்க கூடாது. உடனடி நடவடிக்கை தேவை எனவும் வைகோ கூறினார்.
இலங்கை அகதி பொன் ராஜ் நிலை குறித்து திருச்சி அகதிகள் முகாம் முன்பு நாளை காலை மக்கள் நலக் கூட்டணி சார்பாக ஆர்ப்பாட்டம். நடைபெறும் என வைகோ தெரிவித்தார்.
பின்னர் போராட்ட முழக்கங்களை தொல். திருமாவளவனும், ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் சொல்ல ஆர்ப்பாட்டம் தொடங்கி முழக்கங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட மேடையில் சென்று அமர்ந்தார்கள்.
இதில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் மற்றும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கூட்டணி கட்சிகளின் தோழர்களும் ஏராளமாக கலந்துகொண்டார்கள்.
தொடக்க உரை நிகழ்த்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர், தோழர் முத்தரசன் அவர்களின் கண்டன உரையில், இந்த ஆணவக் கொலையை கண்டித்து முதல்வர் அறிக்கை வெளியிடாத்து ஏன்? முன்னாள் முதல்வர் கருணாநிதி வெகு நாள் கழித்துதான் நமது கேள்விகளுக்கு பிறகு கண்டனம் தெரிவித்தார்.
எல்லாவற்றையும் "என்னுடைய அரசு" என்று சொல்லும் ஜெயலலிதா சங்கர் படுகொலையைக் கண்டிக்கவில்லை. ஹரிஜன்களின் சம்பந்தி என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி இரண்டு நாள் கழித்து ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு முன்பு நான் சொன்ன செய்திகளைப் போடுங்கள் என்று சொல்லி படுகொலைக்கு கருத்து தெரிவிக்காதவர் டாக்டர் ராமதாஸ்.
பெரியார், அம்பேத்கர் படத்தைப் பயன்படுத்தவோ, சிலைகளுக்கு மாலை அணிவிக்கவோ கருணாநிதி, ஜெயலலிதா, ராமாதாஸ் ஆகியோருக்கு அருகதை இல்லை. நாங்கள் தான் பாலும் பழமும் சாப்பிட போகிறோம். மக்கள் எங்கள் பக்கம்.
மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்குப் பாதுகாப்பும், கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும் எனவும் தோழர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், பேட்டி கூட தர மறுப்பவர்கள் மத்தியில், தன் பே த் தி க்கு ஆறுதல் சொல்வது போல மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய வி த த் தி ல் அண்ணன் வைகோ அவர்களின் மனித நேயம் தெரிந்தது.
இந்த கூட்டணி, தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல. மக்கள் நலக் கூட்டணி சமூக அக்கறைக்காக கைக் கோர்த்து இருக்கிறோம்.
கடந்த ஒரு சில ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகள் 182. ஆனால் சாதியின் பெயரால் கொல்லப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 5000 க்கும் மேல். ஐ.பி.எஸ். அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி தொல்.திருமாவளவன் தகவல்களை தெரிவித்தார்.
சாதி வெறி அரசியலை எதிர்க்கின்ற துணிச்சல் இடதுசாரிகளுக்கும் அண்ணன் வைகோ அவர்களுக்கும் மட்டுமே உண்டு. கூலிப்படைக் கலாச்சாரம் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா அரசு செயலிழந்து கிடக்கிறது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் எனவும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
மூன்றாவதாக பேசிய மார்க்ஸிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றும்போது, சங்கர் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியது தமிழக அரசு. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவர இடது சாரிகள் ஆதரவு தெரிவித்தோம்.
ஆனால் தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலை எதுவும் நடைபெறவில்லை என பொய்யுரைத்தார் அப்போதைய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.
சட்டமன்றத்தில் இருந்த ஸ்டாலின் அமைதி காத்தார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தவருக்குக் கொலை மிரட்டல். ஆணவக் கொலையைக் கண்டித்த திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்.
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மீது சிறு துரும்பு கூட பட அனுமதிக்க மாட்டோம். Don't play with fire. நெருப்போடு விளையாடாதீர்கள். ஒரு சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்க மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என தோழர் ஜி.ஆர் ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.
இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்கள்,
தேமுதிக இன்னும் திமுக கூட்டணி க்கு வரும் என்று ஏமாற்றுவது ஏன் என கருணாநிதி க்கு கேள்வி எழுப்பினார். எங்களுக்கு சா தீய பார்வை கிடையாது எனவும் தெரிவித்தார்.
செல்போன் சிங்கங்கள் சிலிர்த்து எழுந்து விட்டார்கள்.
ஊழலை ஒழிக்கக் களம் இறங்கி விட்டார்கள். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவார்கள் எனவும் இணையதள அணியினரின் மேலுள்ள நம்பிக்கையை தெரிவித்தார்.
செ ல் போ ன் சிங்கங்களையும் சா தீய சிந்தனைகளுக்குள் தள்ளி விடுபவர்கள்தான் கயவர்கள். கூட்டணி கட்சி தோழர் களுக்குள் ஒருவருக்கு ஒன்று என்றால் மற்ற கூட்டணி கட்சி தோழர்கள் ஒன்று திரள வேண்டும் எனவும் அன்பு வேண்டுகோள் வைத்தார்.
க்யூ ப் ரா ஞ் ச் போலீசார் இலங்கை அரசுக்கு கை க் கூலி வேலை பார்க்கிறார்கள். மக்கள்தான் கடவுள் என்று தோழர் முத்தரசன் குறிப்பிட்டார்.
மக்கள் நலக் கூட்டணியை மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தும் நாள் தொலைவில் இல்லை. சாதி வெறி என்னும் விசத்தை விதைப்பவர்கள் இந்த சமூகத்தின் விரோதிகள். சாதியப் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம் மக்கள் நலக் கூட்டியக்கம். மக்கள் நலக் கூட்டணியைக் கண்டு ஆண்ட, ஆளும் கட்சிகள் கலங்கிக் கிடக்கின்றன.
மத்திய மாநிலக் காவல்துறை சிறிசேனாவுக்கு கைக்கூலி போல செயல்படுகின்றன எனவும் வைகோ குற்றம் சாட்டினார். நாளை மறுதினம் திருச்சி அகதிகள் முகாம் முன்பு மக்கள் நலக் கூட்டணியின் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்தார்.
கூட்டம் முடிய சன் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முத்தரசன் அவர்கள், யார் தமிழர், யார் தமிழர் அல்லாதவர் என சான்று வழங்கும் அதிகாரத்தை சீமானுக்கு யாரும் வழங்கவில்லை. மக்கள் நலக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும். எத்தனை முயற்சி எடுத்தாலும் மக்கள் நலக் கூட்டணியை எள் முனை அளவு கூட உடைக்க முடியாது எனவும், தோழர் இரா. முத்தரசன் உறுதியாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment