ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினரும், மதிமுக வாழ்நாள் உறுப்பினருமான கலிங்கப்பட்டி திரு.கனகராஜ் அவர்கள் நேற்று 09-03-2016 இரவு, தாய் நாடாம் தமிழகத்திற்கு விடுமுறையில் சென்றார். மஸ்கட் விமான நிலையத்திற்கு வருகிற வழியில், தன்னுடைய கழக வாழ்நாள் உறுப்பினர் அட்டையை ஊருக்கு எடுத்து செல்ல வேண்டுமென்றெண்ணி, ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினரும், கழக வாழ்நாள் உறுப்பினருமான திரு.விஸ்வநாதன் அவர்களிடம் கேட்டபொழுது, அவர் உடனே மஸ்கட் விமானநிலையத்தில் சென்று திரு.கனகராஜ் அவர்களை சந்தித்து அவரிடம் மதிமுக வாழ்நாள் உறுப்பினர் கார்டை கையளித்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும், கழகத்தையும், அதன் கொள்கைகளையும் எப்பொழுதும் நெஞ்சில் சுமக்கிற ஆருயிர் சகோதரர்கள் கலிங்கப்பட்டி திரு.கனகராஜ், கேட்ட மாத்திரத்திலே விமான நிலையம் வரை சென்று வாழ்நாள் உறுப்பினர் அட்டையை கையளித்த திரு.விஸ்வநாதன் ஆகியோருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
சகோதரர் கலிங்கப்பட்டி திரு.கனகராஜ் அவர்கள், விடுமுறையை மகிழ்சியாக கொண்டாடவும், கிடைக்கும் நேரத்தில் கழக களப்பணியாற்றவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment